
தமிழ் படம் 2-ன் கதாநாயகன் அறிமுகப்பாடல் நேற்று ரிலீசாகியது. இந்த பாடலினை இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். இந்த பாடலின் வரிகள் அனைத்தும் பல திரையுலக பிரபலங்களை வெளிப்படையாகவே கலாய்த்திருக்கிறது. கலாய்ப்பதுடன் நிற்காமல் கடுமையாக விமர்சனமும் செய்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக
“பீட்டா வந்தா எனக்கென்ன?
மீத்தேன் எடுத்தா எனக்கென்ன?
நான் வாயே திறக்க மாட்டேன்….!
எனக்கு U வேணும்…!
டேக்ஸ் ஃப்ரீ வேணும்…!
மாஸ் ஓப்பனிங்க் வேணும்…!”
எனும் வரிகளில் அப்படியே ரஜினிகாந்தை கலாயத்திருக்கிறது தமிழ்படம் 2 பாடல். மேலும் “நான் எப்போ எங்க எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஏன்னா நான் வரவே மாட்டேன்.” எனும் வரிகளும் இந்த பாடலில் வரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இது யாரை குறிப்பிடுகிறது என சின்னக்குழந்தைகளுக்கு கூட புரிந்துவிடும்.
”பீச்சில் தியானம் பண்ண மாட்டேன்” வரிகளில் ஓபிஎஸ்-ஐயும், ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. ஏன்னா நான் US கிளம்பி போயிடுவேன். என கமலையும் கலாய்த்திருக்கின்றனர். ”நான் டீவியில இருந்து வந்தேன் என் புரொடுயூசருக்கு பாவம் காரே இல்லைனு” சிவகார்த்திகேயனை கலாய்த்திருக்கும் பாடலாசிரியர், விஷாலை கலாய்க்கும் விதமாக “ என் உயிர் மூச்சே சங்கம் தான். மண்டபம் கட்டிட்டு தான் என் கல்யாணம்னு” கூறி இருக்கிறார்.
ஆனால் இந்த பாடலில் பாராட்டு யாருக்கு என்ன என்று பார்க்கும் போது, விஜய் பற்றி கூறும் வரிகளில் ”வாழு வாழ விடு, நானும் நீயும் நண்பேண்டா” என்றும் அஜீத் பற்றி “ நான் தலைவன் இல்ல அதுக்கு ஆசை இல்ல, ஒரு மன்றம் இல்ல, அத கலைச்சிட்டேன்” என கூறி இருக்கிறார், இந்த படத்தின் இயக்குனரும் பாடலாசிரியருமான சி.எஸ்.அமுதன்.
ஆனால் பாடல் வரிகளில் இப்படி பிரபலங்களை வெளிப்படையாக கலாய்த்திருக்கும் இவரின் தைரியம் கொஞ்சம் ஆச்சரியமானது தான். இந்த தைரியத்திற்கு தானே இளைஞர்கள் தமிழ்படம் 2-விற்கு இப்படி மாஸ் வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.