
‘இதோ ’சர்கார்’ படத்தோட ஹெச்.டி. பிரிண்ட் ரெடி’ என்று தமிழ் ராக்கர்ஸ் வழக்கம்போல டென்சன் பண்ண வழக்கத்தை விட சற்று அதிகமாகவே உஷ்ணமடைந்திருக்கிறது தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இது சங்கத்தோட தன்மானப்பிரச்சினை என்று தயாரிப்பாளர்கள் பலரும் முண்டாசு தட்டி வருகின்றனர்.
இதை ஒட்டி இன்று மாலை சற்றுமுன்னதாக அவசர அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர் சங்கம் ஒவ்வொரு விநியோகஸ்தரும் விழிப்பாக இருக்கவேண்டும். குறிப்பாக தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் தியேட்டரில் சந்தேகத்துக்குரிய நபர்கள் தென்பட்டால் உடனே போலீஸில் புகார் தெரிவிக்கவேண்டும். இன்யும் தவறு நிகழாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது.
இன்னொரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ் இதையும் மீறி படத்தை இணையத்தில் வெளியிடும் பட்சத்தில் அவற்றை முடக்கும் குழுவினரின் எண்ணிக்கை இம்முறை பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், ‘’ இந்த முயற்சிகளின் ரிசல்ட் மேல் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை. என்றைக்கு ரசிகர்கள் அந்த இணையதளத்தில் படம் பார்ப்பதை தவிர்க்கிறார்களோ அப்போது அவர்களாகவே முடங்கிவிடுவார்கள்’ என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.