
Director RD Narayanamurthy Death : தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆர்.டி. நாராயணமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 59. கடந்த வாரம் தான் நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நாராயண மூர்த்தியின் மறைவும் தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக சென்னையின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், உடல் நலத்தில் முன்னேற்றம் காணாமல் நேற்று இரவு 8.30 மணியளவில் மரணமடைந்தார். 2001ஆம் ஆண்டு வெளிவந்த மனதை திருடிவிட்டாய் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நாராயணமூர்த்தி. பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற கிளாசிக் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
இதன் பின்னர் ஒரு பொண்ணு ஒரு பையன் படத்தை இயக்கிய அவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி உள்பட சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி இருக்கிறார். இயக்குனர் நாராயணமூர்த்திக்கு அம்சவேணி என்கிற மனைவியும், லோகேஸ்வரன் என்கிற மகனும் உள்ளனர். தற்போது நாராயணமூர்த்தியின் மகன் லண்டனில் பணிபுரிந்து வருவதால் அவர் சென்னை திரும்பிய பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையுலகில் தனித்துவமான கதைக்களங்களைத் தேர்வு செய்து ரசிகர்களுக்கு படங்களை அளித்த நாராயணமூர்த்தியின் மறைவு, தமிழ்சினிமா உலகுக்கே பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.