நான்கெத்ழுது பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும் படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம்.
நான்கெத்ழுது பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும் படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம்.
வாரிசு நடிகர் உத்திரவாதம் அளித்ததன் பேரில், அந்த தயாரிப்பாளர் ஒரு பெரிய தொகையை அவருக்கு கொடுத்துள்ளார். படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. இதனால் கடனாக கொடுத்த தொகையை திரும்ப தரும்படி வாரிசு நடிகரிடம் அந்த தயாரிப்பாளர் கேட்க "நான் உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன்' என்று வாரிசு நடிகர், தயாரிப்பாளரை சமாதானம் செய்திருக்கிறார்'.
இப்போது, வாரிசு நடிகர் சொன்னபடி நடித்து கொடுக்க முடியாது என்பது போல் கூற... தயாரிப்பாளர் தன்னை சந்திக்கிற அனைவரிடத்திலும் வாரிசு நடிகர் பற்றி புகார் செய்து வருகிறாராம்.
சுதாரித்த நாயகிகள்:
தேசிய விருது பெற்ற படத்தின் மூலம் பிரபலமான குளிர்ச்சியான நாயகியும், 'வழக்கு' படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூரு நடிகையும் ஆரம்ப காலத்தில் நடித்த சில படங்கள் திரைக்கு வரவே இல்லை. அந்த படங்கள் அனைத்தும் ஒரு நாள், இரண்டு நாள் படப்பிடுப்புடன் நின்று போனது. இப்போது அந்த 2 நடிகைகளும் பிரபல நாயகிகள் ஆகிவிட்டார்கள்.
2 நடிகைகளும் இப்போது சுதாரித்துக் கொண்டார்கள் . தங்களிடம் கதை சொல்ல வருபவர்கள் படத்தை எடுத்து. முடித்து திரைக்கு கொண்டு வருவார்களா? என்பதைத்தான் முதலில் பார்க்கிறார்களாம்.