
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய அழகி என்கிற பெருமைக்கு உரியவர் நடிகை சுஷ்மிதா சென். அழகிப் பட்டம் வென்ற பின் நடிகையாக மாறினார் சுஷ்மிதா.
தமிழில் இவர் ரட்சகன் படத்தில் மூலம் அறிமுகமாகினார், பின் வலுவான கதைகள் எதுவும் இவருக்கு அமையாததால் தமிழில் வேறு படங்களில் நடிக்க வில்லை. முதல்வன் படத்தில் ஒருபாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
தற்போது 41 வயதிலும் மிகவும் இளமையாகத் தோற்றமளிக்கும் இவர் ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்து சிக்கென்று வைத்துள்ள இடுப்பை புகைப்படம் எடுத்து இன்ஸ்டிகிராமில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
இவர் இந்தப் புகைப்படத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த புகைப்படம் மிகவும் வைரலாக அனைவராலும் பார்க்கப்பட்டது.
ஃப்ரனிச்சர் கடையொன்றின் திறப்பு விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக சுஷ்மிதா சென் ஷார்ஜா சென்றுள்ளார். தொடர் பயணத்தில் இருக்கும் அவர் தனது புதிய வொர்க் அவுட் ஃபோட்டோவைப் பற்றிக் கூறுகையில், 'பயணங்களுக்கு நடுவே மீண்டும் வொர்க் அவுட்டை தொடங்கிவிட்டேன். எனது 42 பிறந்த தினத்துக்குள் இந்தப் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறேன். இத்தனை விரைவாக உடல் இளைக்க முடியாது என்று சிலர் குறை கூறலாம். ஆனால் நான் தொடர்ந்து வொர்க் அவுட் செய்து என் பிறந்த நாளுக்குள் உடலை கச்சிதமாக வைத்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது வரை சுஷ்மிதாவின் இந்தக் கருத்துக்கு 95,274 லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கில் பாராட்டுரைகளும் குவிந்து வருகிறது.
அவருடைய புகைப்படமும் தன்னுடல் சார்ந்து அவர் கூறிய விஷயங்களும் நெட்டிசன்களிடையே வைரலாகி விட்டது. சுஷ்மிதாவின் பிறந்த நாள் நவம்பர் 19 என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.