தற்கொலை எண்ணத்தை சொல்லாமல் சொன்ன சுஷாந்த்... ட்விட்டர் கவர் போட்டோவில் மறைந்திருந்த மர்மம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 15, 2020, 01:28 PM IST
தற்கொலை எண்ணத்தை சொல்லாமல் சொன்ன சுஷாந்த்... ட்விட்டர் கவர் போட்டோவில் மறைந்திருந்த மர்மம்...!

சுருக்கம்

இந்நிலையில் சுஷாந்த் தான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்பதை ஏற்கனவே அறிவுறுத்தினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தோனி வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன இளம் நடிகரின் இந்த திடீர் முடிவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதற்கட்ட விசாரணையில் சுஷாந்த் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், கடந்த ஒரு மாதமாகவே தந்தை, சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: “சீல் டவுன்” மட்டும் தான் ஒரே தீர்வு...!! மாண்புமிகு எடப்பாடியார் கவனத்திற்கு......

பீகாரில் வசித்து வந்த சுஷாந்தின் குடும்பத்தினர் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ள இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை வந்தடைந்துள்ளனர். உடலைக் கைப்பற்றிய போலீசார் மும்பையில் உள்ள கூபர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு சுஷாந்த் உடலை கூராய்வு செய்த மருத்துவர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்தனர். இந்நிலையில் சுஷாந்த் தான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்பதை ஏற்கனவே அறிவுறுத்தினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதையும் படிங்க:  சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

வானியல் மற்றும் விஞ்ஞானம் சம்பந்தமான விஷயங்களில் ஆர்வமுடையவரான சுஷாந்த், ஒவியர் வின்சென்ட் வான் கோக்கின் தீவிர ரசிகர் ஆவார். சுஷாந்த் இறப்பதற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டோவில் வைத்த பெயிண்டிங் பல மர்மங்களை கிளப்பியுள்ளது. காரணம் இருவருடைய மரணத்திற்குமிடையே இருக்கும் ஒற்றுமை ரசிகர்களை எண்ணற்ற கேள்விகளை கேட்க வைத்துள்ளது.  'Starry nights' என்ற அந்த ஓவியம் 1890ம் ஆண்டு வரையப்பட்டது. 

 

இதையும் படிங்க: கண்கலங்க வைக்கும் சுஷாந்த் சிங்கின் கடைசி பதிவு... தாயின் போட்டோவுடன் உருக்கம்...!

சுஷாந்த், வான் கோக் இருவரும் 34 வயதில் உயிரிழந்துள்ளனர்.சுஷாந்த் போஸ்ட் செய்துள்ள பெயிண்டிங்கை வரைந்து சரியாக ஓராண்டிற்கு பிறகு வான் கோக் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். வறுமை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் வான் கோக் தற்கொலை செய்து கொண்டது அப்போது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் சுஷாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அதே ஓவியத்தை கவர் போட்டோவாக வைத்ததன் மூலம் தான் மன அழுத்தத்தில் இருப்பதையும், தற்கொலை செய்து கொள்ளப் போவதையும் சொல்லாமல் சொன்னாரா? என எண்ணி ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் கண் கலங்குகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!