காதல் மன்னனாக மாற மறுத்த சூர்யா...

 
Published : Apr 02, 2017, 03:59 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
காதல் மன்னனாக மாற மறுத்த சூர்யா...

சுருக்கம்

surya not acting the geminiganesan character

நடிகர் சூர்யா தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்து நடிப்பவர். அப்படித்தான் கடந்த வருடம் இவர் நடித்து வெளிவந்த 'பசங்க 2 ' படம் மிக பெரிய வெற்றிபெற்றது.

இந்த படத்தில் இவர் சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் இந்த திரைப்படம் இவருக்கு பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தது... இந்த படத்தின் வெற்றி விழாவில் ஒரு முறை பேசிய சூர்யா தான் நடிக்கும் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் முக்கியமானதாக இருந்தால் நடிப்பேன் என கூறி இருந்தார்.

இந்நிலையில் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் கேரக்டரில் நடிக்க நடிகர் சூர்யாவிடம்  பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த கேரக்டரில் சூர்யா நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதுகுறித்து சூர்யா தரப்பினர் கூறியபோது, 'மகாநதி' படத்தில் ஜெமினி கணேசன்' கேரக்டரில் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். ஆனால் தற்போது ஒருசில காரணங்களால் அது நடைமுறை ஆகவில்லை' என்று கூறினர். 

அதற்கு காரணம் கதாநாயகிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதால் இந்த படத்தில் நடிக்க சூர்யா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்திற்கு மீண்டும்  படக்குழுவினர்  வேறு பொருத்தமான நடிகரை தேடி வருகின்றனர்.

சாவித்ரி கேரக்டரில் நடிகை கீர்த்திசுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் சமந்தா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!