
தமிழ் சினிமாவில், அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழ் மொழி மட்டும் இன்றி இவருக்கு தெலுங்கு திரையுலகிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இவர் நடிப்பில் கடைசியாக 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும், 'NGK ' திரைப்படம் பல நாட்களாக உருவாகி வருகிறது. இது குறித்து ஒரு முறை கேள்வி எழுப்பட்டதற்கு, நல்ல கருத்தை கொண்ட படங்கள் தாமதமாக தான் வரும் என பதில் கொடுத்தார்.
மேலும் 'காப்பான்' படமும் இந்த வருடம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு, பல ஆண்டுகளாவே கிராமத்து பின்னணியில் அமைந்த கதையில் நடிக்க வேண்டும் என்று, அதற்கு ஏற்றாப்போல் ஒரு கதையை தயார் செய்ய கூறி இயக்குனர் பாண்டியராஜிடம் கூறி கால்ஷீட் ஒதுக்கி கொடுத்திருந்தாராம்.
ஆனால், பாண்டிராஜ் தற்போது தன்னை ஏமாற்றுவது போல்... சிவகார்த்திகேயன் படத்தை இயக்க சென்றுள்ளது சூர்யாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.