‘ஹலோ’ படத்தின் இயக்குநருடன் சேர்ந்து படம் தயாரிக்க ஆசைப்படும் சூப்பர் ஸ்டார்...

 
Published : Dec 14, 2017, 10:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
‘ஹலோ’ படத்தின் இயக்குநருடன் சேர்ந்து படம் தயாரிக்க ஆசைப்படும் சூப்பர் ஸ்டார்...

சுருக்கம்

Superstar wants to make a film with the director of hello

‘ஹலோ’ படத்தின் இயக்குநரான விக்ரம் குமாருடன் இனைந்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார்  நாகார்ஜூனா ஆசைத் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா, அகில் என தாத்தா, மகன், பேரன்கள் இணைந்து நடித்த படம் ‘மனம்’. இந்தப் படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்கியிருந்தார்.

அந்தப் படத்தின் டப்பிங் பணிகள் நடந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், தனக்கான டப்பிங் பேசி ஆச்சர்யப்படுத்தினார் நாகேஸ்வரராவ்.

அதனையடுத்து மீண்டும் நாகார்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிப்பில் ‘ஹலோ’ என்ற படத்தை அவரது இளைய மகன் அகிலை வைத்து இயக்கியிருக்கிறார் விக்ரம் குமார்.

இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இந்தப் படத்தை சில நாள்களுக்கு முன்பு பார்த்த நாகார்ஜூனா ‘ஹலோ’ படம் சிறப்பாக வந்திருக்கிறது என்று விக்ரம் குமாரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

மேலும், தனது அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு மீண்டும் ஒரு படத்தை இயக்கித் தருமாறும் விக்ரம் குமாரிடம் அன்புக் கட்டளை போட்டுள்ளார் நாகார்ஜூனா.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்