ஒருவேளை உணவிற்கே வழியில்லாமல் போராடும் சூப்பர்ஸ்டார் பட நடிகை! காசநோயால் அவதி...

Asianet News Tamil  
Published : Mar 20, 2018, 12:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
ஒருவேளை உணவிற்கே வழியில்லாமல் போராடும் சூப்பர்ஸ்டார் பட நடிகை! காசநோயால் அவதி...

சுருக்கம்

Superstar movie actress who fights without food Suffering from tuberculosis

பாலிவுட் நடிகை பூஜா தட்வால் ஒரு வேலை உணவுக்கு கூட பணம் இல்லாமல் காச நோய் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகை பூஜா தட்வால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் 'வீர்காடி', 'ஹிந்துஸ்தான்', 'சிந்தூர் கி சவுகந்த்' போன்ற இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் கடந்த சில வருடங்களாக காசநோயால் பாதிக்கப்பட்ட அவரதிப் பட்டுவந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் இருப்பதை அறிந்த பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இவர் தற்போது மிகுந்த வறுமையில் தவித்து வருகிறார். திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த பூஜா தட்வாலுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பூஜா.

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதைத் தெரிந்து கொண்ட பூஜாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையிலேயே யாரிடமும் சொல்லாமல் வந்துவிட்டார்களாம். இதனை எதிர்ப்பார்க்காத பூஜா ஒருவேளை உணவுக்கும், டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் போராடி வருகிறாராம். 



மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் இவருக்கு  அங்குள்ள சிலர் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஜோடியாக நடித்த சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக இருக்கிறாராம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?