ஆரம்பமானது ரஜினியின் "தர்பார்"... ஓவர் நைட்டில் யூ-டியூப்பை அலறவிட்ட சூப்பர் ஸ்டார் ... மரண மாஸ் காட்டும் "சும்மா கிழி"...!

Published : Nov 28, 2019, 12:19 PM IST
ஆரம்பமானது ரஜினியின் "தர்பார்"... ஓவர் நைட்டில் யூ-டியூப்பை அலறவிட்ட சூப்பர் ஸ்டார் ... மரண மாஸ் காட்டும் "சும்மா கிழி"...!

சுருக்கம்

ராக் ஸ்டார் அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிளான "சும்மா கிழி" பாடல் நேற்று வெளியானது. மேலும் "சும்மா கிழி" பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளைப் போலவே ரஜினியின் தர்பார் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. 

"பேட்ட" படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் அதிரடி காவல் அதிகாரியாக நடித்துள்ள இந்த படம், 2020ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டப்பிங் பணிகளையும் ரஜினிகாந்த் பேசி முடித்துவிட்டார். ராக் ஸ்டார் அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிளான "சும்மா கிழி" பாடல் நேற்று வெளியானது. மேலும் "சும்மா கிழி" பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளைப் போலவே ரஜினியின் தர்பார் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. 

தலைவரின் போஸ்டரையே வேல்ட் லெவலுக்கு ட்ரெண்டாக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சொல்லியா தர வேண்டும். நேற்று பாடலை வெளியிடுவதற்கு முன்பிருந்தே  #DarbarFirstSingleToday என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. இதையடுத்து லைகா நிறுவனம் அறிவித்திருந்தபடி சரியாக நேற்று மாலை 5 மணிக்கு "சும்மா கிழி" பாடல் வெளியிடப்பட்டது. 

"தர்பார்" படத்தில் ரஜினிகாந்தின் இண்ட்ரோ சாங்கான சும்மா கிழி பாடலை, 73 வயதிலும் எனர்ஜி குறையாமல் பாடியுள்ளார் எஸ்.பி.பி.  "நான் தாண்டா இனிமேலு, வந்து நின்னால் தர்பார்" என தொடங்கும் பாடல் யூ-டியூப்பில் செம்ம மாஸ் காட்டி வருகிறது. விவேக் வரிகளில் "தோலோட சிங்கம் வரும் சீனோட" என ஒவ்வொரு வரிகளிலும் ரஜினிக்கான மாஸ் வெற லெவலில் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் வெளியான "சும்மா கிழி" பாடல் யூ-டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

 

தமிழில் "சும்மா கிழி" பாடலை இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். அதேபோன்று #ChummaKizhi என்ற ஹேஷ்டேக்கை சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் தற்போது இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?