சூப்பர் சிங்கர் டைட்டிலை கைப்பற்றிய செந்தில் கணேஷ்...! குவியும் வாழ்த்து..!

 
Published : Jul 16, 2018, 02:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
சூப்பர் சிங்கர் டைட்டிலை கைப்பற்றிய செந்தில் கணேஷ்...! குவியும் வாழ்த்து..!

சுருக்கம்

super singer winner senthil ganesh

இசை மீது ஆர்வம் கொண்ட, அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் மேடையாக இருந்து வருகிறது விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

‘சூப்பர் சிங்கர்’ சீசன் 6 நிகழ்ச்சி தற்போது பைனலை எட்டியுள்ள நிலையில்,  யார் இதில் வெற்றி பெறுவார் என்கிற, எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான, ராஜ லட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதிகளுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை கொடுத்து வந்தனர்.

ஆனால் இறுதி சுற்றில் ராஜ லட்சுமி இல்லை என்பது பலருக்கும் வருத்தம்.

எனினும் அவரது கணவர் செந்தில் கணேஷ் இறுதி சுற்றிக்கு முன்னேறினார். 6 போட்டியாளர்கள் பைனலில் கடுமையான போட்டியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் சிறப்பு நடுவர்களாக, பாடகர் மாணிக்க விநாயகன், ஏ.ஆர்.ரகுமான்,  கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வாய்ஸ் எக்ஸ்பேர்ட் ஆனந்த் வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாக படுத்தினார்.

இந்த போட்டியில் பைனலுக்கு முன்னேறியுள்ள சக்தி, செந்தில் கணேஷ், மாளவிக்கா, ஸ்ரீகாந்த், ரக்ஷிதா என அனைவரும் போட்டி போட்டு தங்களால் முடிந்த வரை மிகவும் கடினமான பாடல்களை தேர்வு செய்து பாடி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த போது... ரிசல்ட் அறிவிக்கபட்டது. முதல் பரிசு அனைவரும் எதிர்ப்பார்த்த நாட்டுபுற பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை கவர்ந்த செந்தில் கணேஷ்க்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு ரக்ஷிதாவிற்கும், மூன்றாவது பரிசு மாளவிக்காவிற்கும் வழங்கப்பட்டது.

மேலும் ஸ்பெஷல் பர்பாம்மென்ஸ் கொடுத்த ராஜ லட்சுமிக்கு 5 லட்ச ரூபாய் பரிசும், ‘மக்கள் குரல்’ என்கிற பட்டமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டுபுற பாடல்களை மேடையேற்றி, முதல் பரிசை வென்றுள்ள செந்தில் கணேஷ்க்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி