சூப்பர் விமனாக மாறிய சன்னி லியோன்... சோசியல் மீடியாவை அதிரிபுதிரியாக்கிய வீடியோ...!

Published : Nov 04, 2019, 04:24 PM IST
சூப்பர் விமனாக மாறிய சன்னி லியோன்... சோசியல் மீடியாவை அதிரிபுதிரியாக்கிய வீடியோ...!

சுருக்கம்

கணவருடன் சேர்ந்து சன்னி லியோன் சன்சிட்டி மீடியா எண்டர்டைமெண்ட் பிரைவேட் லிமிட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அந்த நிறுவனத்தில் தயாராக உள்ள புதிய படத்திற்கு "கோர்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதில் தீய சக்திகளை அழிக்கும் சூப்பர் விமனாக அவதாரம் எடுத்துள்ளார் சன்னி லியோன். 

சூப்பர் விமனாக மாறிய சன்னி லியோன்... சோசியல் மீடியாவை அதிரிபுதிரியாக்கிய வீடியோ...!

கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சன்னி லியோன் சூப்பர் விமனாக அவதாரம் எடுத்துள்ளார். ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வந்த சன்னி, அதன் மூலம் கிடைத்த புகழால் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தில் சன்னி லியோன் கண்டிப்பாக கவர்ச்சி குத்தாட்டம் போட்டாக வேண்டுமென காத்துக்கிடக்கின்றனர். சன்னி லியோனுக்கு நடிப்பே வராது என பாலிவுட் நடிகைகள் நக்கலடித்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஓரம் கட்டுவது போன்று "ஜிம்ஸ் 2" படத்தில் நடித்து பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார் சன்னி. 

காதல் கணவர் டேனியல் வெப்பருடன், சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளதாகவும், அதன் மூலம் பாலிவுட் படங்களை தயாரிக்க உள்ளதாகவும் நீண்ட நாட்களுக்கு முன்பே சன்னி லியோன் தெரிவித்திருந்தார். கணவருடன் சேர்ந்து சன்னி லியோன் சன்சிட்டி மீடியா எண்டர்டைமெண்ட் பிரைவேட் லிமிட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அந்த நிறுவனத்தில் தயாராக உள்ள புதிய படத்திற்கு "கோர்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதில் தீய சக்திகளை அழிக்கும் சூப்பர் விமனாக அவதாரம் எடுத்துள்ளார் சன்னி லியோன். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சன்னி லியோன், கோர் இந்த கிரகத்தை சேர்ந்தவள் இல்லை என்றாலும், தீய சக்திகளிடம் இருந்து உலகை காக்க தயாராகிறாள் என்று குறிப்பிட்டுள்ளார். கோர் படத்தின் அறிமுகம் குறித்து சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சன்னி லியோன். அதில் சன்னியின் கேரக்டர் வடிவமைப்பு மேட்ரிக்ஸ் பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போல இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் சூப்பர் ஹீரோ கேரக்டரில் நடிக்க வேண்டும் சன்னியின் ஆசை நிறைவேறியுள்ளது. அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் வெளியாகியுள்ள சன்னி லியோனின் அறிமுக காட்சி சோசியல் மீடியாவில் லைக்குகளை அள்ளி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?