காலிச்சட்டியான சுனில் ஷெட்டி... தர்பாரில் விழுந்த பொத்தல்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 9, 2020, 5:17 PM IST
Highlights

கதை மும்பையில் எடுக்கப்பட்டிருப்பதாலும், மும்பையை சேர்ந்த முகங்கள் அடிக்கடி எட்டிப்பார்ப்பதாலும், பலரும் ஹிந்தியில் பேசுவதாலும் தர்பாரில் ஹிந்தி நெடி வீசுகிறது. 

தர்பார் படத்தில் ரஜினிக்கு முக்கிய வில்லனாக வரும் சுனில் ஷெட்டியின் அறிமுகமும் பில்ட் அப்பும் இருந்த அளவுக்கு அவரது வேடம் இல்லை. வில்லன் வேடத்தையும் ரஜினியே எடுத்துக்கொண்டதால் ஒருவேளை சுனில் ஷெட்டியை காலிச் சட்டியாக ஆக்கிவிட்டார்கள் போலும்.  பாலிவுட் படங்களில் அதிகமும் பணியாற்றி வந்திருக்கும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது.

 

அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் தன்மையுடன் இருந்தாலும் திரையரங்கைவிட்டு வெளியே வரும்போது எதுவும் மனதில் நிற்கவில்லை. எரிந்த காவல் நிலையத்தை செட்போட்ட அந்த ஆர்ட் டைரக்டரை அப்படியே தூக்கி ஆணியில் மாட்டவேண்டும். செட் என்று தெரியும் விதமாக ஒவ்வொன்றும் பளிச்சென்று இருப்பது ‘மாஸ்’படம் என்பதற்காகக் கூட இருக்கலாம். கதை மும்பையில் எடுக்கப்பட்டிருப்பதாலும், மும்பையை சேர்ந்த முகங்கள் அடிக்கடி எட்டிப்பார்ப்பதாலும், பலரும் ஹிந்தியில் பேசுவதாலும் தர்பாரில் ஹிந்தி நெடி வீசுகிறது.

 

கதைக்கு நயன்தாரா தேவையேயில்லை. வீக் கிளைமாக்ஸ். இந்தி நடிகர்கள். ஆனால், என்ன செய்ய எல்லா மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டுமே. சில சமரசங்கள் தேவைப்பட்டிருகிறது. அதைத்தவிர படம் கொல மாஸ்! 

click me!