இனி சமூக கருத்து சொல்லும் படங்களை என்னால் இயக்க முடியாது! எடுத்தால் கமல் படம் போல் மாறிவிடும்! சுந்தர்.சி

By manimegalai aFirst Published Mar 1, 2019, 8:01 PM IST
Highlights

இயக்குனர் சுந்தர்.சி சமீப காலமாக படம் இயக்குவது, நடிப்பது மற்றும் தயாரிப்பு என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
 

இயக்குனர் சுந்தர்.சி சமீப காலமாக படம் இயக்குவது, நடிப்பது மற்றும் தயாரிப்பு என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய தயாரிப்பில் ஏற்கனவே ஹிப் ஹாப் ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில்,  இந்த படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ஆதியை கதாநாயகனாக வைத்து 'நட்பே துணை' என்கிற படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சுந்தர்.சி.  'மீசையை முறுக்கு, 'நட்பே துணை; போன்ற சமூக கருத்துக்களை கூறும் படங்களை என்னால் இனிமேல் இயக்க முடியாது. 

அப்படியே நான் இயக்கினால் அது கமல் நடிப்பில் நான் இயக்கி இருந்த  'அன்பே சிவம்' போல் ஆகிவிடும். அதனால் தான் இதுமாதிரி கருத்து சொல்லும் படங்களை தயாரித்து வருகிறேன்.

ஒருவேளை ஆதி தன்னுடைய தயாரிப்பில் முதல் முதலாக நடித்த,  'மீசையை முறுக்கு' திரைப்படம் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஆதியை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என நானும் எனது மனைவி குஷ்புவும் முடிவு செய்திருந்தோம். ஆனால் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அதேபோல் நல்ல கருத்து கூறும் கதையான 'நட்பே துணை' கதையை ஆதி என்னிடம் கூறினார். இந்த படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமானாலும் ஸ்கிரிப்ட் மேல் உள்ள நம்பிக்கையால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன்' என்று சுந்தர் சி தெரிவித்தார்.

மேலும் என்னிடம் ரசிகர்கள் ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் காமெடி படத்தை தான் எதிர்பார்க்கின்றனர். கருத்து கூறும் வகையான படங்களை எதிர்ப்பார்க்க வில்லை என்றும் சுந்தர்.சி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


 

click me!