சிவாஜி பேரனுக்கும்... பிக் பாஸ் சுஜா வருணிக்கும் டும் டும் டும்...! திருமண தேதி வெளியானது!

Published : Sep 29, 2018, 12:39 PM IST
சிவாஜி பேரனுக்கும்... பிக் பாஸ் சுஜா வருணிக்கும் டும் டும் டும்...! திருமண தேதி வெளியானது!

சுருக்கம்

2002  ஆம் ஆண்டு தமிழில் பிளஸ் 2 படத்தில் அறிமுகமான நடிகை சுஜா வருணி, ஏனோ இவரால் முன்னணி கதாநாயகி என்கிற இடத்தை மட்டும் பிடிக்க முடிய வில்லை. 

2002  ஆம் ஆண்டு தமிழில் பிளஸ் 2 படத்தில் அறிமுகமான நடிகை சுஜா வருணி, ஏனோ இவரால் முன்னணி கதாநாயகி என்கிற இடத்தை மட்டும் பிடிக்க முடிய வில்லை. நடிப்பை தாண்டி பல படங்களில் ஐட்டம் டான்ஸ் கூட ஆடியுள்ளார். இதனால் இவரை பலர் கவர்ச்சி நடிகை என்கிற பட்டியலில் தான் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றில், வையில் கார்டு சுற்றின் மூலம் உள்ளே நுழைந்தார். இவர் உள்ளே வந்ததில் இருந்து நடிகை ஓவியாவை போல் நடந்து கொண்டதால், ரசிகர்களில் ஆதரவை இழந்து வெளியேற்றப்பட்டார்.        

                                                                                                                                                                                 
                
தற்போது மீண்டும் ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜா வருணி.   மேலும் இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூத்த மகனின் மகன், ராம் குமாரின் மகன் சிவகுமார் என்கிற சிவாஜி தேவ்வை காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்களும் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்தது.

அண்மையில் இவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் தனக்கு திருமணம் உறுதி படுத்தப்பட்டு விட்டதாகவும், சிவகுமார் என்பவருக்கும் தனக்கும் வரும் நவம்பர் 19ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள தான் அதிர்ஷ்டம் செய்தவள் என்று மகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் பலர் இவருக்கு தொடர்ந்து, தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Arasan: மதுரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'அரசன்'.! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான் என்ன?!
Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!