
தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஜாதா. இவர் பெரும்பாலும் படங்களில் அம்மா, அண்ணி, அக்கா போன்ற வேடங்களில் அம்மா, அதிகம் நடித்திருக்கிறார். கமல்ஹாசன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு 2007ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் சுஜாதா. இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
அதுமட்டும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார், உதயநிதி என பல நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். என இவருடைய மதுரை மண்ணின் மொழி மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இவர் சமீபத்தில் விஜய், அஜித் குறித்து பேசியுள்ள பேட்டி செம வைரலாகி வருகிறது.. அதில் அஜித்துக்கு கல்லூரி காலங்களில் நிறைய லெட்டர் போட்டுள்ளதாக சுஜாதா கூறியுள்ளார். மேலும் அஜித் மிகவும் அன்பானவர் திடீரென செட்டில் உள்ள அனைவருக்கும் பிரியாணி சமைக்க ஆரம்பித்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் குறித்து பேசியுள்ள சுஜாதா விஜய் எளிமையானவர்.. நடிப்பின் போது பதட்ட பட்ட தனக்கு நிதானமாக விஜய் சொல்லிக்கொடுக்கவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.