விஜய்சேதுபதிக்காக "Wonder Women" ஆக மாறி திகைப்பில் ஆழ்த்திய ஸ்ருதிஹாசன்! - லாபம் படக்குழு பாராட்டு...!

Published : Oct 31, 2019, 09:53 AM IST
விஜய்சேதுபதிக்காக "Wonder Women" ஆக மாறி திகைப்பில் ஆழ்த்திய ஸ்ருதிஹாசன்! - லாபம் படக்குழு பாராட்டு...!

சுருக்கம்

விஜய்சேதுபதிக்காக "Wonder Women" ஆக மாறி திகைப்பில் ஆழ்த்திய ஸ்ருதிஹாசன்! - லாபம் படக்குழு பாராட்டு...!  

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'சிங்கம்-3'. இந்தப்படத்திற்குப் பிறகு நடிப்பதிலிருந்து ஒதுங்கிய அவர், மேற்கத்திய இசை  நிகழ்ச்சிகளில் ஆர்வம் செலுத்தி வந்தார். 

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள ஸ்ருதிஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன்  விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘லாபம்’ படம், சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்துடன் அதிரடி ஆகஷன் படமாக உருவாகிறது. 

இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் கலையரசன், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில், இந்தப் படத்திற்கான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. 

அதில், அந்தரத்தில் தொங்கியபடி வித்தியாசமான நடனமாடி அனைவரையும் ஸ்ருதிஹாசன் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது திறமையைக் கண்ட படக்குழுவினர், ஸ்ருதிஹாசனை  "வொண்டர் வுமன்"என அழைத்து பாராட்டி புகழ்ந்துள்ளனர். மேலும், ஸ்ருதிஹாசன் நடனமாடிய புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?