ஸ்ரீதேவியின் 300 வது திரைப்படம் மாம்... ஒரு பார்வை...!

 
Published : Jun 23, 2017, 07:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
ஸ்ரீதேவியின் 300 வது திரைப்படம் மாம்... ஒரு பார்வை...!

சுருக்கம்

sridevi mom movie

திரைப்படத்தை பற்றி:
ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிடவேண்டாம். ஏனெனில் சவால் என்று வந்துவிட்டால், அவள் நரகத்தையும் விலை பேசுவாள்.
தேவகி சபர்வால் கணவர் ஆனந்த் மற்றும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும் பிரியாவுடனும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏனோ ஒரு தாயுள்ளத்தின் உண்மையான மனமகிழ்ச்சியை தான் இன்னும் உணரவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. ஆரியாவால் தன் தந்தையிடம் காட்டும் நெருக்கத்தை தன் தாயிடம் காட்ட இயலவில்லை. ஒரு மகள் தன்னுடைய தாயின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெறுகிறாள், ஆனால் ஒரு தாய் தன்னுடைய மகளின் வாழ்வில் அத்தணை முக்கியத்துவம் பெறுவதில்லை என ஆர்யா திடமாய் நம்புகிறாள். வார்த்தைகளால் சொல்லாவிடினும், ஒரு தாய்க்குத் தானே தெரியும் தன் மகளை பற்றி என்று, தேவகியும் தன் மகள் ஒரு நாள் புரிந்துகொள்வாள் என பொறுமையாகக் காத்திருக்கிறாள்.  இந்த சூழலில் திடீரென நடந்த ஒரு கொடூரமான நிகழ்வு, இருவருக்குமிடையேயான உறவில் சரி செய்ய முடியாத ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. தேவகி முன் இருப்பது, சரி எது தவறு எது என்பதல்ல. எது தவறு எது சரியல்ல என்பதே. இந்த போராட்டத்தில், தேவகி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பும், எடுக்கும் முடிவுகளும் மட்டுமே, அவளுக்கு தன் மகள் ஆர்யாவின் அன்பைப் பெற்று தரும்.  
ஸ்ரீதேவி கபூர் முக்கிய கதாபாத்திரமான தேவகி சபர்வாலாக நடித்துள்ளார். இரு அழகான பெண் குழந்தைகளின் தாயாய், ஒரு வேலைக்கு போகின்ற வயதான பெண்மணியாய் உலா வருகிறார். அவளுக்கு புரிதலுக்கும், அனுதாபத்திற்கும் உள்ள வேறுபாடு நன்றாகத் தெரியும். தேவகிக்கும் ஆர்யாவுக்கும் இடையே இருக்கும் இந்த உள்ளார்ந்த அடிப்படை பதற்றத்தை எவ்வளவு முயன்றும் குறைக்க முடியவில்லை. இந்த நேரத்தில், ஆர்யாவின் வாழ்வில் ஏற்பட்ட அந்த கொடூர சம்பவம், அவளைப் புரட்டிப் போட்டு விட, தேவகி அத்தனை எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்துப் போராடி தன் மகளின் அன்பை பெறுகிறாள்.

 
மேத்யு பிரான்சிஸ், எனும் ஒரு குற்றபிரிவு காவல்துறை அதிகாரியாக அக்ஷய் கண்ணா களமிறங்குகிறார். ஒரு குற்றவாளி விடுதலையானால் அடையும் வெறுப்பை விட, வேறு யாராவது தன் வேலையை செய்தால் அதிக வெறுப்படைபவர். நேர்மையும், சுய நீதியும் கொண்ட மேத்யு, தன் வாழ்வின் மிக கடினமான, ஒரு சவாலான ஒரு வழக்கோடுப் போராடிக் கொண்டிருக்கிறார். தன் வாழ்நாளில் முதன் முறையாக ஒரு குற்றத்தைத் தன்னால் நிரூபிக்க முடியவில்லை என்பதை அவர் உணர ஆரம்பிக்கிறார்.

 
தேவகியின் கணவர், ஆனந்த் சபர்வாலாக அத்னான் சித்திக் வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய மனைவியின் மீதும், இரு மகள்களின் மீதும், நிபந்தனையற்ற நிறைவான அன்பு செலுத்தும் ஒரு மனிதர். அந்த துயர சம்பவம் நிகழ்ந்த போது, தன் மகளுக்கு ஒரு நம்பிக்கையாய், பலமாய், தைரியம் சொல்லித் தேற்றி  வருகிறார்.   


ஆர்யா சபர்வாலாய் சஜல் அலி நடித்துள்ளார். எளிதில் உணர்ச்சி வசப்படும் ஆர்யா, தன் தந்தையிடம் பேரன்பு கொண்டிருகிறாள். தன்னுடைய தங்கை, பிரியாவை அன்புடன் வரவேற்கும் ஆர்யாவால், ஏனோ தன்னுடைய தாயை ஏற்று கொள்ள முடியவில்லை. உற்சாகமாகவும், கொஞ்சம் முரட்டு புத்திசாலித் தனத்துடனும் வலம் வரும் ஆர்யா, அந்த துயர சம்பவத்திற்கு பின் உடைந்து, நொறுங்கிப் போகிறாள். நம்பிக்கையைத் தேடித் தன் வாழ்வின் மீதியையும் தொலைத்துக் கொண்டிருக்கிறாள்.

 
தேவகியின் இளைய மகள் பிரியா சபர்வாலாய் ரீவா அரோரா வருகிறார். இந்த துறுதுறு சுறுசுறு அழகி, அனைவரது கண்களையும் கவனத்தையும் கவர்ந்து, கலகலப்பூட்டும் ஒரு பைங்கிளி. பிரியா குடும்பச் சூழலில் ஏதோ ஒரு அசௌகரியம் நிலவுவதைப் புரிந்துகொண்டு, சிரிப்பையும், சந்தோஷத்தையும் மீட்க முயற்சிக்கிறாள்.


தயாசங்கர் கபூர், சுருக்கமாக - டிகே என எல்லோராலும் அழைக்கப்படும் வேடத்தில், நவாசுதீன் சித்திக் மிளிர்கிறார். தார்யகஞ்ச்சின் மிக நெருக்கடியானப் பகுதியில் தூசிபடிந்த ஒரு சிறிய அலுவலகத்திலிருந்து கொண்டும், ஒரு ஆபத்தான ஸ்கூட்டரில் பயனித்துகொண்டும், சிறிய அளவிலான துப்பறியும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு துப்பறியும் நிபுணர். நகைச்சுவையான இவர், உணர்ச்சிவயப்பட்டு தன்னுடைய சக்திக்கு மீறிய ஒரு வழக்கில் தன்னை இணைத்து கொள்கிறார். 

எல்லோராலும் வெகுவாக பாராட்ட பெற்ற மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் தயாரிப்பாளர். இந்திய திரையுலகின் “நூற்றாண்டு கண்ட இந்திய சினிமா” விழாவில் சேகர் கபூரால் இயக்கப்பெற்ற இத்திரைப்படம், சிறந்த நூறு படங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கபட்டு கௌரவிக்கப்பட்டது.
வணிக நோக்கில் வெற்றியென்பது மட்டுமில்லாமல், ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கும் திரைப்படங்களைத்  தயாரிப்பது அவரது தனித்திறமை. ராஜ்குமார் சந்தொஷி இயக்கத்தில், 2000ல் இவர் தயாரித்து வெளிவந்த ‘புகார்’, திரைதுறையின் உயரிய விருதான,  இரண்டு தேசிய விருதுகளை வென்றது.


ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2002ல் வெளிவந்த “கம்பனி”, பரிந்துரைக்கப்பட்ட பதினோரு பிரிவுகளில், ஆறு பிரிவுகளில் விருதுகளைத் தட்டிச் சென்றது.  இத்திரைப்படம், 2004ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்டின் திரைப்பட விழாவிலும், நியூயார்க்-ஆசிய திரைப்பட விழாவிலும், வெகுவான பாராட்டுகளையும் பெற்றது. அவர் தயாரித்து 1997ல் வெளிவந்த “ஜுடாய்” ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம். இவர் தயாரிப்பில் 2005 ல் வெளிவந்த “தி காமெடி”, “நோ என்ட்ரி”  மாபெரும் வசூலை வாரி குவித்தது. 2009 ல் சல்மான்கானை கதாநாயகனாக நடிக்க வைத்து அவர் தயாரித்த “wanted” அனைத்து முந்தைய சாதனைகளையும் முறியடித்து, இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.  100 கோடியும், அயல்நாடுகளில் சுமார் ரூ. 26  கோடியும் விற்பனையாகி வசூல் சாதனை படைத்தது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகைகள்; 2025 ல் திருமணம் செய்த நடிகைகளின் பட்டியல்!
பெண்களின் உடை குறித்து சிவாஜியின் கமெண்ட்ஸ்... சின்மயி, அனசுயா பதிலடி