50 வருடம் கடந்து... 300 வது படத்தில் ஸ்ரீதேவி...

 
Published : May 23, 2017, 07:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
50 வருடம் கடந்து... 300 வது படத்தில் ஸ்ரீதேவி...

சுருக்கம்

sridevi across 50 years

நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனது முதல், அவர் கதாநாயகியாக நடித்த அணைத்து படங்களிலும் அவரை ரசிக்காத ரசிகர்களே இல்லை... இன்று வரை அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.  1967ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் நாள் 'துணைவன்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் 'நம்நாடு', சிவாஜிகணேசனுடன் 'வசந்தமாளிகை' போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். அதன் பின்னர் 1976ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடித்த 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் நாயகியாக மாறினார். 

நாயகியான பின்னர் அவர் கொடுத்த வெற்றி படங்கள் கணக்கிலடங்காது. கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே ராசியான ஜோடியாக வலம் வந்தார்.
 
இந்நிலையில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவரவுள்ள 'மாம்' திரைப்படம் அவரது 300வது படம் ஆகும். இந்த படத்தை அவர் அறிமுகமான முதல் படம் வெளியான அதே ஜூலை 7ஆம் தேதி வெளியிட ஸ்ரீதேவியின் கணவரும் 'மாம்' படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் திட்டமிட்டுள்ளார்.
 
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் நான்கு மொழிகளுக்கும் அவரே டப்பிங் குரல் கொடுக்கவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. 
 
ரவி உத்யவார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!