
தெலுங்கு முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், சிலர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்தி கொண்டதாக குற்றம் சாட்டியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
மேலும் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கியதற்காக, பிலிம் சாம்பர் முன் அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டு சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இவரின் போராட்டத்தை தெலுங்கு திரையுலகினர் யாரும் கண்டு கொள்ளாததாலும், இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாலும், இவருடைய பார்வை தமிழ் திரையுலக பிரபலங்கள் மேல் திரும்பியது.
பின் கோலிவுட் முன்னணி பிரபலங்களான ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் மீது குற்றம் சாட்டினார்.
தற்போது சென்னையில் வந்து செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி தன்னுடைய பட வேட்டையையும் துவங்கி விட்டார். அந்த வகையில் தற்போது 'ரெட்டியின் டைரி' என்கிற பெயரில், அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் இயக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.
மேலும் அவ்வப்போது டிக்டாக் வீடியோ, மற்றும் தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வரும் ஸ்ரீரெட்டி, இப்போது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள ஒரு பதிவு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதில்... "என்னால் பெற்றோரை தவிர யாரையும் உண்மையாக நேசிக்க முடியாது. அதையும் மீறி நான் யாரையாவது நேசித்தால் அவர்களுடன் ஒரு வருடம் மட்டுமே டேட் செய்வேன், அதற்க்கு மேல் எனக்கு போர் அடித்துவிடும். இதனால் எனக்கு திருமணம் பிடிக்காது. எனக்கு ஒவ்வொரு முறையும் புதிய காதல் வேண்டும். நான் தனனா ஃபிளேகேர்ள். நோ ட்ராமா, நோ கமிட்மென்ட், நோ கன்பியூஷன் என கூறியுள்ளார்.
அந்த பதிவு இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.