Sri Reddy accuses AR Murugadoss Raghava Lawrence and Srikanth of sexual exploitation
தமிழ் நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் போது எடுத்த வீடியோவை வெளியிடும் திட்டத்தில் ஸ்ரீரெட்டி இருப்பதாக கூறப்படுகிறது.தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்துவிட்டு பின்னர் தன்னை ஏமாற்றவிட்டதாக கூறி அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர் ஸ்ரீரெட்டி. இதன் பிறகு தன்னை ஏமாற்றிய நடிகர்கள் என்று ஒரு பட்டியலையே வெளியிட்டார் இவர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என தன்னை ஏமாற்றியவர்கள் குறித்து ஒருவர் பின் ஒருவராக ஸ்ரீரெட்டி வெளியிட்டார். இதனால் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பிரபலமான ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் திரையுலகில் தன்னை ஏமாற்றியவர்கள் என்று கூறி பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளார். முதலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வாய்ப்பு தருவதாக கூறி ஹோட்டலுக்கு வரவழைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். மறுநாளே நடிகர் ஸ்ரீகாந்த் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திர கிரிக்கெட் விளையாட வந்த போது ஐதராபாத் ஓட்டலில் வைத்து தன்னுடன் இரவை கழித்ததாக ஸ்ரீரெட்டி தெரிவித்தார். இவர்களுக்கு எல்லாம் உச்சமாக திரையுலகில் மட்டும் அல்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல பெயருடன் இருக்கும் ராகவா லாரன்சுக்கு எதிராக பகீர் புகாரை ஸ்ரீரெட்டி வெளியிட்டார். இப்படியாக 3 முக்கிய நபர்களுக்கு எதிராக பாலியல் புகார் கூறியும் ஸ்ரீரெட்டி ஊடகங்களால் அதிகம் கவனிக்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஆதாரம் இல்லாமல் ஸ்ரீரெட்டி பேசி வருவதாக ஊடகவியலாளர்கள் கருதியது தான். மேலும் போகிற போக்கில் அனைவர் மீதும் ஸ்ரீரெட்டி சேற்றை வாரி இறைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் என்று தமிழ் செய்தியாளர்கள் சிலர் ஸ்ரீரெட்டியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு விரைவில் ஆதாரத்தை வெளியிட உள்ளதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். என்ன ஆதாரம் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட போது, வீடியோ வெளியாகும் போது உங்களுக்கே தெரியும் என்று ஸ்ரீரெட்டி ட்விஸ்ட் வைத்து முடித்துள்ளார். ஸ்ரீரெட்டி இதுநாள் வரை தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். அதே வகையில் செய்தியாளர்களிடம் கூறியது போல் தமிழ் திரையுலக பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை விரைவில் ஸ்ரீரெட்டி வெளியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.