பகலில் அம்மா என்று அழைப்பவர்கள் ராத்திரி படுக்க கூப்பிடுகிறார்கள்…..கதறி அழுத தெலுங்கு நடிகைகள் !!

 
Published : Apr 17, 2018, 06:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
பகலில் அம்மா என்று அழைப்பவர்கள் ராத்திரி படுக்க கூப்பிடுகிறார்கள்…..கதறி அழுத தெலுங்கு நடிகைகள் !!

சுருக்கம்

Sri Leaks telegu actress press meet in hydrabad

நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களுக்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக பல நடிகைகள் செய்தியாளர்கள்  முன்பு கதறி அழுதனர்

நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்து இருப்பது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். திரையுலக பிரபலங்கள் ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.



மகளிர் அமைப்புகள் ஸ்ரீரெட்டிக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளன. ஸ்ரீரெட்டி மற்றும் அவரை ஆதரிக்கும் நடிகைகள் அபூர்வா, சுனிதா ரெட்டி, சுருதி, சந்தியா நாயுடு, ஹேமா, நாகலட்சுமி உள்ளிட்ட பலர் ஐதராபாத்தில் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது  பேசிய சந்தியா நாயுடு  தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள் என்றார். .

பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள் ஆனால் இரவு ஆனதும் தங்களுடன் படுக்க கூப்பிடுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

மற்றொரு நடிகையான சுனிதா ரெட்டி, வெளிப்புறப் படப்பிடிப்பின்போது, வெட்ட வெளியில் தங்களை உடை மாற்றச் சொல்வதாகவும், நடிகைகளை புழுக்களைப் போல் பார்ப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

வெட்ட வெளியில் உடை மாற்றும்போது தங்களை பெண் என்று கூட பார்க்காமல் பதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதாகவும் சுனிதா ரெட்டி தெரிவித்தார்.

நடிகர் பவன் கல்யாண் அமராவதியில் ரூ.200 கோடியில் வீடு கட்டுகிறார். ஆனால் நடிகைகளின்  கஷ்டங்களை அவர் கண்டுகொள்வது இல்லை. கோனா வெங்கட், அப்பாராவ் உள்பட பலர் பெண்கள் கற்பை சூறையாடுகிறார்கள். புதிய படங்களில் வாய்ப்பு கேட்கும் ஆண்களிடம் பணம் கேட்கிறார்கள். ஆனால்  பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.. 



80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது. வயதான பெண்களையும் விடுவது இல்லை. செக்ஸ் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதலமைச்சர்கள் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் அந்த நடிகைகள் தெரிவித்தனர். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட நடிகைகள் கதறி அழுதனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!