3000 இணையதளங்கள்! உலகெங்கும் 10000 தியேட்டர்கள்... 2.0 படத்தில் இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?

By sathish kFirst Published Nov 28, 2018, 11:19 AM IST
Highlights

ஷங்கர் இயக்கத்தில்,  ரஜினிகாந்த் மற்றும் அக்சயக்குமார் நடித்துள்ள '2.0' வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில்,  ரஜினிகாந்த் மற்றும் அக்சயக்குமார் நடித்துள்ள '2.0' வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், படத்தை பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ள லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மிக பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள '2.0' படத்தை முறைகேடாக இணையதளத்தில் வெளியிடப்பட்டால் மிக பெரிய அளவில் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, '2.0' படத்தை இணையதளத்தில் வெளியிட 3000 இணையதளத்துக்கு தடை  விதிக்கப்பட்டது.

மேலும், இந்த படத்தின் பல சிறப்புகளை இங்கே காண்போம்...

1.சூப்பர்ஸ்டாரின் அட்டகாச நடிப்பில் மீண்டும் சிட்டி

2.பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழில் தந்த ஒரு உலக சினிமா

3.543 கோடி பொருட்செலவில் தயாரான படம்

4.உலகெங்கும் 10000 தியேட்டர்களில் வெளியாகும் படம்

5.இசையமைப்பாள் ஏ.ஆர்.ரகுமான், சவுண்ட் எஞ்சினியர் ரசூல் என இரு ஆஸ்கார் நாயகர்கள் பணியாற்றிய படம்..!

6.எடுத்த பின் 3D ஆக மாற்றம் செய்யாமல், நேட்டிவ் 3D நுட்பத்தில் நேரடியாக 3D விசுவலாக படமாக்கப்பட்ட படம்..!

7.உலகின் முன்னணி 25 ஸ்பெசல் எபெக்ட்ஸ் ஸ்டூடியோக்களில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்ற படம்..!

8.அனிமேட்ரிக்ஸ் என்ற புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்ட படம்

9.ஆக்சன் காட்சிகளுக்காக மூன்று வெளிநாட்டு ஆக்சன் டைரக்டர்கள் பணிபுரிந்தபடம்

10.முதல் முறையாக அதி நவீன 4D சவுண்ட் எபெக்ட் படம்...!
இப்படி பல சிறப்புகளுடன் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்கும் சூப்பர்ஸ்டாரின் 2.0.
 

click me!