வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது எஸ்.பி.பி. உடல்... இறுதிச்சடங்கு குறித்து வெளியானது அறிவிப்பு....!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 25, 2020, 4:06 PM IST
Highlights

சரியாக 3.30 மணி அளவில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை காம்தார் நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

கொரோனா அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. அங்கு 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பியின் உடல் நிலை தொடக்கத்தில் மோசமடைந்தாலும், கடந்த சில நாட்களாக நல்ல நிலையில் முன்னேறி வந்தது. கடந்த 4ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்தது. இதனால் எஸ்.பி.பி. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார் என அனைவரும் காத்திருந்தனர். 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவர் நலம் பெற வேண்டுமென பிரார்த்தினர்.

ஆனால் இன்று மதியம் சரியாக 1.04 மணிக்கு எஸ்.பி.பி. நம்மை விட்டு பிரிந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகள் மற்றும் மருத்துவர்கள் உடன் முயன்ற போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

சரியாக 3.30 மணி அளவில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை காம்தார் நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மாலை 6 மணி வரை அவரது உடலுக்கு பொதுமக்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையடுத்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ளது. இறுதிச்சடங்கு இன்று இரவு அல்லது நாளை கடக்கிறதா என்பது குறித்து குடும்பத்தினர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளனர்

click me!