
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவிற்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை போயஸ் தோட்டத்தில் உள்ள, ரஜினிகாந்தின் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளது.
அதற்கும் முன்னதாக தற்போது திருமண வரவேற்பு மற்றும் திருமணத்தின் முன்னேற்ப்பாடுகள், களைகட்டி வருகிறது.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், சமூக வலைத்தளத்தில் தன்னுடைய வாழ்வில் உள்ள மூன்று முக்கியமான ஆண்கள் பற்றி பதிவு செய்துள்ளார்.
தன்னுடைய டார்லிங் என குறிப்பிட்ட தந்தை ரஜினிகாந்த் என கூறியுள்ளார். தேவதை என கூறி தன்னுடைய மகன் வேத்தை கூறியுள்ளார். கடைசியாக என்னுடைய விசாகன் என கூறி மனதில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவர் மூவரும் என்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள்' என்று கூறியுள்ள செளந்தர்யா, மூவரின் புகைப்படங்களியும் பதிவு செய்துள்ளார்.
செளந்தர்யா இந்த டுவீட் பதிவிட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. மேலும் நாளை முதல் புதிய வாழ்க்கையை தொடங்கவிருக்கும் செளந்தர்யாவுக்கு பலர் தங்களுடைய வாழ்த்து மழையில் அவரை நனைத்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.