
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வேலைகளில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய குழந்தை வேத் உடன் நேரம் செலவழிக்க மட்டும் மறப்பதில்லை.
அடிக்கடி தன்னுடைய குழந்தை வேத் செய்யும் சிறு சிறு குறும்பு தனங்களையும் புகைப்படம் வழியாகவும், வீடியோ வழியாகவும் வெளியிட்டு தன்னுடைய குடும்ப சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்நிலையில் திடீரென்று, குழந்தைகளுக்கு இளம் வயதில் நீச்சல் பழகி கொள்ள வேண்டும் என்றும், இது மிகவும் முக்கியம் என்றும் அதே நேரத்தில் குழந்தைகளை விட்டு விலகாமல் அருகிலேயே இருந்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நீச்சலின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கு அறிவுரை கூறிய படி ட்விட் ஒன்றை போட்டார் சௌந்தர்யா.
தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், தண்ணீர் சேமிப்பது குறித்து பேசாமல், நீச்சல் குளத்தில் குளிப்பது அவசியமா? என நெட்டிசன்கள் சிலர் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு எதிராக ட்விட்டுகளை அடுக்கடுக்காக போட ஆரம்பித்தனர். இதையடுத்து சௌந்தர்யா பதறியடித்தபடி தான் போட்ட ட்விட்டை நீக்கி விட்டார்.
மேலும் இதுகுறித்து விளக்கம் கொடுக்கும் வகையில், தற்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் பிரச்சனைகளுக்கு இடையே இந்த புகைப்படம் பதிவு செய்தது சரியாக இருக்காது என்பதால் அதனை டெலிட் செய்து விட்டேன். சிறு குழந்தைகள் நீச்சல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே , அந்த ட்விட்டின் நோக்கமாக இருந்தது. தண்ணீர் சேமிப்பதும் முக்கியம் தான் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.