
’நான் செய்யவேண்டிய முக்கியமான வேலை ஏதோ பாக்கி இருப்பதால்தான் இந்நேரம் இறந்துபோய் இருக்கவேண்டிய என்னைக் கடவுள் உயிரோடு திருப்பி அனுப்பி இருக்கிறார்’ என்று உருக்கமாகப்பேசியிருக்கிறார் பிரபல இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே.
தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே, பல ஆண்டுகளாக இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி இப்போது மீண்டு வந்து இருக்கிறார்.
தான் தற்போது முற்றிலும் குணமான தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்ட அவர்’’புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது.
அறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் ஆபரேஷன் செய்த வடுக்கள் உள்ளன. நான் மறுபடியும் செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஏதோ பாக்கி இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்து இருக்க மாட்டேன்.
கடவுள் எதற்காக என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார் என்ற காரணத்தை கண்டுபிடிப்பேன். எத்தனையோ எண்ணைக்கு விளம்பரம் செய்த நான் எனது தலைமுடியை இழந்து விட்டேன். பழைய முடி எனக்கு இல்லை என்ற உணர்வு வருகிறது. ஆனாலும் எனது புருவங்கள் மறுபடியும் வந்து விட்டது. குணமாகி வந்த பிறகு பயம் இல்லாமல் போய் விட்டது. இனிமேல் எனது வாழ்க்கையில் பயம் என்பது இல்லை.” என்கிறார் சோனாலி பிந்த்ரே.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.