தங்கம் வென்ற கோமதிக்காக அறச்சீற்றம் கொள்ளும் அன்பர்களே...நண்பர்களே...அரைவேக்காட்டு சாம்பார்களே...

Published : Apr 27, 2019, 02:56 PM ISTUpdated : Apr 27, 2019, 02:57 PM IST
தங்கம் வென்ற கோமதிக்காக அறச்சீற்றம் கொள்ளும் அன்பர்களே...நண்பர்களே...அரைவேக்காட்டு சாம்பார்களே...

சுருக்கம்

ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது இட்லி சாப்பிடக் காசு இல்லாததால் கார்ப்பரேசன் குழாயில் தண்ணீர் குடித்துவிட்டுப் பசியும் பட்டினியுமாக ஓடினார் என்று இஷ்டத்துக்குக் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு கோமதியை விடவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.  

இரு தினங்களாக முகநூல்,வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்காக எத்தனை விதமான பொங்கல்கள்,பொறுமல்கள் மற்றும் இருமல்கள்... கிழ்ந்த ஷூ போட்டு ஓடினார். ஒரே கலரில் ஷூ வாங்கக் காசில்லாததால் இரண்டு கலரில் ஷூ வாங்கினார். [அடேய் அது டபுள் செலவுடா...] ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது இட்லி சாப்பிடக் காசு இல்லாததால் கார்ப்பரேசன் குழாயில் தண்ணீர் குடித்துவிட்டுப் பசியும் பட்டினியுமாக ஓடினார் என்று இஷ்டத்துக்குக் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு கோமதியை விடவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

அந்தச் செய்திகள் உண்மை என்ற ஒன்று எங்காவது இருக்கிறதா? இதோ இந்தப் பதிவைப் பட்டியுங்கள்...

அறச்சீற்றம் கொள்ளும் அனைத்து ஐயன்மீர்களுக்கும் -

செல்வி கோமதி அவர்கள், கிழிந்த ஷூ உடன் ஓடினேன் என்றது இந்தப்போட்டியில் இல்லை ஐயன்மீர். அவருடைய கடந்த காலங்களைச் சொல்கிறார். சொந்தக்காசில் தான் போட்டிகளுக்காக விமானத்தில் செல்வதாகச்சொன்னதும் கடந்த காலங்களே. அவர் தற்போது sports quotaல் மத்திய அரசுப்பணியான வருமான வரித்துறையில் பணி கிடைத்து, பெங்களூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிகிறார்.

இவர் தங்கம் வென்றிருப்பது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில். அதற்கு இவரை அனுப்பியது இந்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் கிடையாது. தடகளப்போட்டிகளை நடத்துவதற்கென்றே இருக்கும் Athletic Federation of India - AFI என்கின்ற அமைப்பு. இந்த AFI என்பது, அரசு உதவி பெற்று, அரசு அனுமதியோடு, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, பயிற்சி கொடுக்க, போட்டிகள் நடத்த அமைக்கப்பட்டது. அதேபோல இதே சகோதரி கோமதி அவர்கள், இதே ஆசிய போட்டிகளில், 2013ல் 7வது இடத்திலும், 2015ல் 4 வது இடத்திலும் வந்தவர். அப்போதும் இவர் AFI சார்பில் அனுப்பிவைக்கப்பட்டார்.

ஷூ பஞ்சாயத்துக்கு வருவோம். எந்தவொரு international போட்டிகளிலும், கிழிந்த ஷூ உடனெல்லாம் ஓட முடியாது. அதேபோல வேறு வேறு ஷூவும். எல்லாமே தரம் பரிசோதிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டே அனுமதிக்கப்படும். அதேபோல வீரர்களுடைய உடை, காலணிகள் என அனைத்திற்கும் ஏகப்பட்ட விதிகள் & கட்டுப்பாடுகள் இருக்கிறது.

செல்வி கோமதி உண்மையில் வாய்ப்புக்காக சிரமப்பட்டது, கடந்த காலங்களில். தன்னுடைய தந்தை, தாய் மற்றும் ஏழ்மை நிலையோடு போராடி வென்றிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல், தன்னுடைய கடந்த கால சிரமங்களைப் பற்றி சொல்லியிருப்பதையும், இரண்டு நிறங்களில் இருக்கும் ஷூக்களையும் தவறாக எடுத்துக்கொண்டு ஏகப்பட்ட நண்பர்கள் அறச்சீற்றம் கொள்கிறீர்கள்.

அதுசரி, உங்களுக்குத்தேவை இன்றைக்கு பொழுதுபோக்க ஒரு content தானே 🙂

முகநூலில் ரா.புவன்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!