சிக்கலில் சிக்கித் தவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ சிவகார்த்திகேயன்...

Published : Sep 18, 2019, 05:54 PM IST
சிக்கலில் சிக்கித் தவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ சிவகார்த்திகேயன்...

சுருக்கம்

என்ன காரணத்தாலோ  இன்றுவரை அந்தத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதோடு செய்தித்தாள் விளம்பரங்களும் வரவில்லை. இதனால் செப்டம்பர் 27 ஆம் தேதி அந்தப்படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ’நம்ம வீட்டுப் பிள்ளை’ வெளியீட்டுத் தேதியை அறிவியுங்கள் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.ஆனால் அக்கோரிக்கைக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ, சிவகார்த்திகேயன் தரப்போ ரியாக்ட் பண்ணவே இல்லை.

இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’படம் குறித்த அப்டேட்களோ, செய்தித்தாள்  விளம்பரங்களோ வராததால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பயங்கர அப்செட்டில் உள்ளனர்.படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ’நம்ம வீட்டுப் பிள்ளை’. பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆனால் என்ன காரணத்தாலோ  இன்றுவரை அந்தத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதோடு செய்தித்தாள் விளம்பரங்களும் வரவில்லை. இதனால் செப்டம்பர் 27 ஆம் தேதி அந்தப்படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ’நம்ம வீட்டுப் பிள்ளை’ வெளியீட்டுத் தேதியை அறிவியுங்கள் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.ஆனால் அக்கோரிக்கைக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ, சிவகார்த்திகேயன் தரப்போ ரியாக்ட் பண்ணவே இல்லை.

அது குறித்து படக்குழு வட்டாரத்தில் விசாரித்தபோது, அந்தப்படம் செப்டம்பர் 27 இல் வெளியாவது உறுதி என்றும் அப்படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் பெறவில்லை என்பதால் தேதியை அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.அதைவிட முக்கியமாக, செப்டம்பர் 20 அன்று வெளியாகவிருக்கும் சூர்யாவின் ’காப்பான்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது.இப்போதே நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் விளம்பரங்களைத் தொடங்கினால் காப்பான் படத்துக்கு இடையூறாக இருக்கும் என்பதால் சன் நிறுவனம், நம்ம வீட்டுப் பிள்ளை வெளியீட்டுத் தேதியைக் கூட அறிவிக்காமல் இருக்கிறது என்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் டக்கென்று உயரத்திற்கு வந்த ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். டாப் 5 ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்து வருகிறார். காமெடி, காதல், ஆக்‌ஷன் என்று அனைத்து ஜானரிலும் அவர் முயற்சித்தாலும் வெற்றி மட்டும் கிடைக்கவே இல்லை.’நம்ம வீட்டுப் பிள்ளை’ட்ரெயிலரும் சி.கா.ரசிகர்களைக் கவரவில்லை. ஏற்கனவே கார்த்தியை வைத்த ‘கடைக்குட்டி சிங்கம்’என்கிற அதே மாவையே சிவாவை வைத்து அரைத்திருக்கிறார் என்று அங்கலாய்க்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Peddi OTT Release: 'பெத்தி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா?
Jananayagan Censor: விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு 'A' சர்டிஃபிகேட்டா? பரவும் வதந்தியின் உண்மை என்ன?