
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த "நம்ம வீட்டு பிள்ளை" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த படமான "ஹீரோ" படத்தின் ஷூட்டிங்கும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. விஷாலுக்கு மாஸ் கொடுத்த "இரும்புத்திரை" படத்தை இயக்கிய எஸ்.பி. மித்ரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 20ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் களம் இறங்கியுள்ள படக்குழு, நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், மால்டோ கித்தாப்பு சாங் உள்ளிட்டவற்றை எஸ்.கே. ரசிக புள்ளிங்கோவை வெற லெவலில் மிரளவைத்தது. இதையடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
"ஹீரோ" படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் 2வது போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதுவரை சிவகார்த்திகேயனின் சைடு லுக் போஸ்டர்கள் மட்டுமே வெளியாக வந்தன. முதல் முறையாக சூப்பர் ஹீரோ மாஸ்க் அணிந்த சிவகார்த்திகேயன் கம்பீரமாக பார்க்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. எவனா இருந்தாலும் வாங்க பார்க்கலாம் என்பது போல, செம்ம கெத்தாக முறைத்து பார்க்கும் சிவகார்த்திகேயனின் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் புது லுக்கை பார்த்த ரசிகர்கள் அதனை சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.