வைரமுத்துவுக்கு ஆதரவு! பிரபல நடிகரை வன்மையாக கண்டித்த சித்தார்த்!

Published : Oct 31, 2018, 02:07 PM IST
வைரமுத்துவுக்கு ஆதரவு! பிரபல நடிகரை வன்மையாக கண்டித்த சித்தார்த்!

சுருக்கம்

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் சொன்னது திரையுலகினரையும்ம், ரசிகர்களையும் உலுக்கியது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை நடத்தி வருகிறார்கள்.  

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் சொன்னது திரையுலகினரையும்ம், ரசிகர்களையும் உலுக்கியது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சின்மயியை யாரோ தூண்டி விட்டு இப்படி பேச வைக்கிறார்கள் என்று நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் 'கடைக்குட்டி சிங்கம்', 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் மாரிமுத்து, இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் வைரமுத்து - சின்மயி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

அது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாரிமுத்து அளித்த பேட்டியில், "ஜவுளி கடையில் திருடினார் என்றும் கூறினால் தான் புகார். பெண்ணை அழைப்பது எப்படி தவறாகும். வைரமுத்து ஒரு ஆண். அவர் ஒரு ஆணை அழைத்தாள் அது தவறு. பெண்ணை அழிப்பதில் என்ன தவறு இருக்கிறது. 

விருப்பம் உள்ளவர்கள் படுக்கைக்கு வருவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் வெளியே செல்வார்கள். இந்த பாலியல் விவகாரத்தில் வைரமுத்து புகழுக்கு சிறிதளவு கூட இழுக்கு வர வாய்ப்பு இல்லை. அவர் தமிழுக்கு செய்துள்ள தொண்டு ஏராளம்". என்று கூறியுள்ளார்.

இந்த பேச்சு சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சித்தார்த், "பரியேறும் பெருமாள் படத்தில் கெட்டவனாக நன்றாக நடித்தார் என்று நினைத்தேன். இப்படி பேசி இருக்கிறாரே" என்று அவரை வன்மையாக கண்டிப்பது போல் கூறியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் மாரிமுத்துவுக்கு எதிராக பலர் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வந்தாலும்... சிலர் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ