
’இதுக்கு பேசாம வெறுமனே பாடகராகவே காலம் தள்ளியிருக்கலாமோ?’ என்று புலம்பித் தள்ளிக்கொண்டிருக்கிறாராம் புதிதாய் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் சித் ஸ்ரீராம். அவரது புலம்பலுக்குக் காரணமானவர் சாட்சாத் இயக்குநர் மணிரத்னம்.
’படைவீரன்’ பட இயக்குநர் தனா அடுத்து இயக்கியிருக்கும் படம் ’வானம் கொட்டட்டும்’. இதில் நடிகர் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன், ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு பிரீத்தா ஒளிப்பதிவு செய்ய,பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு முன்னர் ‘96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கமிட் பண்ணப்பட்டு, பின்னர் அந்த இடத்துக்குக் கொண்டு வரப்பட்டவர் சித் ஸ்ரீராம்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து ஏனைய வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.படத்தின் குரல்பதிவு வேலைகள் முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையிலும் படத்தின் பாடல்கள் இறுதி செய்யப்படாமல் இருக்கிறதாம்.பாடல்களைத் தனியாகப் படமாக்காமல் ஏற்கெனவே எடுத்து வைத்துள்ள காட்சிகள் மேல் பாடல்களை வைத்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள் என்பதால் பாடல்களை இன்னும் முடிக்காமல் இருப்பதாக படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மை என்னவென்றால் தயாரிப்பாளரான மணிரத்னம் சித் ஸ்ரீராம் போட்ட எந்த டியூன்களிலும் திருப்தி அடையாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறாராம். முந்தைய இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவே மணிரத்னத்தின் இசை இம்சை தாங்காமல்தான் வெளியேறிவிட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில் பேசாமல் மதிப்பு மிக்க பாடகராகவே திரைத்துறையில் நம் வாழ்க்கையை கண்டிநியூ செய்திருக்கலாமோ என்று நண்பர்கள் வட்டாரத்தில் புலம்ப ஆரம்பித்துள்ளாராம் சித் ஸ்ரீராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.