தந்தை மீது வழக்கு தொடர்ந்த பிரபல பாடகி! வெடிக்கும் பிரச்சனை!

Published : Jan 18, 2019, 06:40 PM IST
தந்தை மீது வழக்கு தொடர்ந்த பிரபல பாடகி! வெடிக்கும் பிரச்சனை!

சுருக்கம்

பிரபல இசைப்பாடகி,  ரிஹானா இவரது தந்தை ரொனால்டு பென்டி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கில் அவர் கூறியுள்ளதாவது, தனது தந்தை ரொனால்டு  பென்டி அவருடைய நண்பர் மோசஸ் பெர்கின்ஸ் என்பவருடன் சேர்ந்து பென்டி என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.  

அதேநேரத்தில் ரிஹானாவும் பென்டி பியூட்டி என்கிற, அழகு சாதன பொருட்கள் நிறுவனம் ஒன்றை 2017ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்துள்ளார். மேலும் உள்ளாடை நிறுவனம் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வந்துள்ளார். 

இந்த நிலையில் ரிஹானாவின் பெயரை அவரது அனுமதியின்றி அவரது தந்தையும், அவருடைய நண்பர் மோசஸ் என்பவரும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதை நிறுத்திக் கொள்ளுமாறு பாடகி ரிஹானா கூறியும் அவர்கள் அதனை கேட்காததால், தந்தை ரொனால்டு பென்டி மற்றும் அவருடைய நண்பர் மோசஸ் ஆகியோர் மீது ரிஹானா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் தந்தை மற்றும் மகள் ஆகியோருக்கு இடையில் பிரச்சனை வெடித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!