பிரபல பாடகி கொடூரமான முறையில் கத்தரிக்கோலால் குத்தி கொலை...!

 
Published : Jul 09, 2018, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
பிரபல பாடகி கொடூரமான முறையில் கத்தரிக்கோலால் குத்தி கொலை...!

சுருக்கம்

singer priyani jasingka murder in srilanka

சிங்கள திரைப்படங்களில் பல பாடல்களை பாடி, தன்னுடைய இனிமையான குரலால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் பிரபல பாடகி பிரியானி ஜெயசிங்கா. 

இந்நிலையில் இவரை இவருடைய கணவரே கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 

கொழும்பில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள களுத்துறை மாவட்டம் , பனதுர நகரில் உள்ள இவருடைய வீட்டில் தான் பாடகி பிரியானி, ஒரு ஜோடி கத்தரிக்கோல் கொண்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த தகவலை காவலர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். 

அதேபோல் பல பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரியானியின் கணவர் போலிசாரால் தேடப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. 

53 வயதாகும் பிரியானி ஜெசிங்காவிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரின் கொலை சம்பவம் தொடர்பாக, இவரின் கணவர் சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்தாலும், தொடர்ந்து இவருடைய மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும் விசாரணைக்கு பின்பே உண்மை நிலவரம் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!