ஒய்.ஜி மகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா...?? வறுத்தெடுத்த சின்மயி..!!

Published : Dec 23, 2019, 04:57 PM IST
ஒய்.ஜி மகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா...??  வறுத்தெடுத்த சின்மயி..!!

சுருக்கம்

ஒய் ஜி மகேந்திரன் போன்ற மனிதர்களின் கருத்துக்களை நாம் அனைவரும் பொதுவாக புறக்கணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் . 

மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ள நடிகர்  ஒய் ஜி மகேந்திரனை  புறக்கணிக்க வேண்டுமென பாடகி சின்மயி காட்டமாக கருத்து கூறியுள்ளார்,  அத்துடன் இது போன்ற நபர்களை திருத்தவே  முடியாது என்றும் அவர்  ஒய். ஜி மகேந்திரனை சாடியுள்ளார் .  திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் பாகிஸ்தான் ,  பங்களாதேஷ் ,  ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குகிறது இச்சட்டம் முஸ்லிம்களின் தனிமைப் படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது எனக்கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. 

இந்நிலையில்  கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வருகின்றனர் .  இச்சட்டத்திற்கு தமிழகம் ,  மேற்கு வங்கம் கர்நாடகா ,  கேரளா ,   உத்தரப்பிரதேசம் ,  மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில்  போராட்டம் கட்டுக்கடங்காத  காட்டுத்தீயாக பரவி வருகிறது . இந்நிலையில்  டெல்லி உள்ளிட்ட இடங்களில்  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கடுமையாக  தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில்  மாணவர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்  நடிகர்  ஒய்.ஜி மகேந்திரன்,  மாணவர்களின் போராட்டம் விடுமுறை கிடைக்கும் என்பதற்காகவும்  பெண்களை சைட் அடிப்பதற்காகவும்தான் நடக்கிறது எனக்கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். இது அவர் மீது  கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது.  

இந்நிலையில் ஒய் . ஜி மகேந்திரனை  பலரும் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர் .  அவரை நெட்டீசன்கள்  கடுமையாக விமர்சித்தும்   வரும் நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாடகி சின்மயி,  ஒய் ஜி மகேந்திரன் போன்ற மனிதர்களின் கருத்துக்களை நாம் அனைவரும் பொதுவாக புறக்கணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் .  இவரைப் போன்றவர்களை எல்லாம் மாற்ற முடியாது .  அதில் நம் நேரம்தான் விரையம் ஆகும்  என அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார் . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!