ஓவியா ரசிகர்களை அசிங்கப்படுத்தி... ஜூலிக்கு பரிந்து பேசிய சின்மயி...

Asianet News Tamil  
Published : Aug 22, 2017, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
ஓவியா ரசிகர்களை அசிங்கப்படுத்தி... ஜூலிக்கு பரிந்து பேசிய சின்மயி...

சுருக்கம்

Singer Chinmaye support julie

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர் தான் பாடகி சின்மயி, மேலும் இவருக்கு அம்மா இல்லை என்கிற விஷயத்தை அறிந்ததும் தான் ஓவியாவை தத்து எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார். 

இப்படி ஓவியாவிற்கு ஆதரவு கொடுத்து வந்த இவர், தற்போது இவருடைய ரசிகர்களை பார்த்து வெக்கமாக இல்லையா உங்களுக்கு...? என அசிங்கப்படுத்துவது போல் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். 

இப்படி இவர் கோவப்பட காரணம்... கடந்து மூன்று வாரங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட, ஜூலியை தற்போது வரை பலர் மீம்ஸ், போட்டு வெறுப்பேற்றி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் அவருடைய வீட்டின் அருகே சென்று ஓவியாவுக்கு ஆதரவாக பேசியும், ஓவியா வெளியேற இவரும் ஒரு காரணம் என்று கூறி பிரச்சனை பண்ணியதாக தெரிகிறது.

இதற்கு தான் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார் சின்மயி, மேலும் இது குறித்து அவர் கூறுகையில் சாதாரண ஒரு ரியாலிட்டி ஷோ விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, அரசியல் ஈடுபாடுகளில் காட்டி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும். அப்படி எதுவும் செய்யாமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பெண்ணின் வீட்டிற்கே சென்று பிரச்சனை செய்துள்ளீர்களே...! வெட்கமாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சின்மயியின் இந்த கருத்திற்கு பலர் தங்களுடைய ஆதரவை ட்விட்டரில் தெரிவித்து  வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பல்லவனை அரெஸ்ட் பண்ணிய போலீஸ்... தம்பியை காப்பாற்றினாரா சோழன்? அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Thaai Kizhavi: தமிழ் சினிமா வரலாற்றையே மாற்றி எழுதிய 'தாய் கிழவி'! ஒரே வாரத்தில் கோடிகளைக் குவித்த ராதிகா சரத்குமார்!