பென்னி தயாளை கரம்பிடித்து 7 ஆண்டுகளுக்கு பின்... திருமணம் பற்றிய பலரும் அறிந்திடாத சீக்ரெட்டை பகிர்ந்த மனைவி

By Ganesh A  |  First Published Jun 7, 2023, 9:33 AM IST

பின்னணி பாடகர் பென்னி தயாளின் மனைவி கேத்தரின், தங்களது திருமணம் பற்றி பலரும் அறிந்திடாத மூன்று சீக்ரெட் விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பின்னணி பாடகராக வலம் வருபவர் பென்னி தயாள். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நியூயார்க்கில் வசித்து வந்த கேத்ரின் பிலிப் என்கிற மாடல் அழகியை மணந்துகொண்டார். குவைத்தில் பிறந்து வளர்ந்தவரான கேத்தரின் அமெரிக்காவில் பல்வேறு பேஷன் ஷோக்களில் பங்கெடுத்துள்ளார். கேத்ரின் - பென்னி தயாள் தம்பதி அண்மையில் தங்களது திருமண நாளை கொண்டாடினர். இதையொட்டி தங்களது திருமணம் பற்றி பலரும் அறிந்திடாத மூன்று விஷயங்களை பகிர்ந்துள்ளார் கேத்தரின். அவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

1. திருமணத்துக்கு பின்னும் நான் என் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை. ஏனெனில் நாங்கள் இருவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர். அதனால் எனது பாஸ்போர்ட், ஓசிஐ கார்டு, சோசியல் செக்யூரிட்டி கார்டு என அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் மாற்றுவது கடினம். எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக என் ஒரிஜினல் பெயரை வைத்துக்கொண்டேன். என்னுடைய ஒரிஜினல் பெயர் கேத்தரின் பிலிப் தான் பணிநிமித்தம் காரணமாக தான் கேத்தரின் தயாள் என வைத்திருக்கிறேன்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன்..! 'ரெஜினா பட விழாவில் சுனைனா பகிர்ந்த ரகசியம்!

2. எங்களது செலவீனங்கள் மற்றும் வீட்டு நிதி நிர்வாகத்தை நான் தான் பார்த்துக்கொள்கிறேன். பென்னி வேலையில் பிசியாக இருப்பதால் வீட்டுக்கு தேவையான பொருட்கள், கரெண்ட் பில், மளிகை சாமான்கள் வாங்குவது என அனைத்தையும் நான் தான் செய்கிறேன். இதுதான் எங்களது திருமண வாழ்க்கையை சிறப்பாக நகர்த்தி செல்ல உதவுகிறது. 

3. வேலை காரணமாக நாங்கள் இருவரும் வெகு தொலைவில் இருக்க நேரிடுவதால் ஒருவரை ஒருவர் ஒரு சில முறை மட்டுமே நேரில் பார்க்க முடியும், இது எளிதான விஷயம் அல்ல, இதற்காக நிறைய தியாகம் தேவைப்பட்டாலும், நாங்கள் திருமண பந்தத்தில் வலிமையுடன் தான் இருக்கிறோம். நாங்கள் எங்கள் திருமண வாழ்க்கையில் மென்மேலும் வளர்ந்து எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதைக் காண ஆவலுடன் இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... என் குழந்தை... வைரமுத்து போல் இல்லைனு சொல்வானுங்க - மகன்கள் குறித்த கேள்விக்கு சின்மயி அளித்த பளீச் ரிப்ளை

click me!