
கோடி கணக்கில் செலவு பண்ணி, நடிகர் சிம்பு ECR பகுதியில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில், பல ஆண்டுகளுக்கு பின் ‘மாநாடு’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
இதில், சமீபத்தில் தான் கௌதம் மென் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படங்களை முடித்தப் பிறகு ராம் இயக்கத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
கமலை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியை, நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்தார். ஒவ்வொரு வார இறுதியிலும் சிம்பு நிகழ்ச்சியை காண ரசிகர்கள் காத்திருப்பார்கள். அந்த அளவிற்கு இவரின் அணுகு முறை தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இதையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது, இதில் பாலாஜி முருகதாஸ் வெற்றிப் பெற்றார்.
இந்நிலையில், ECR பகுதியில் நடிகர் சிம்பு பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல கோடி செலவில் நடிகர் சிம்பு விரைவில் ECRல் தனக்கு பிடித்த மாதிரியான வீட்டை வாங்கவுள்ளார் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.