
சிம்புவின் சினிமா வாழ்க்கை இப்போது தான் மீண்டும் ஏறுமாகி இருக்கிறது.மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் சிம்பு.
இப்படி பெரிய பெரிய இயக்குனர்களின் படம் இப்போது சிம்புவுன் கைவசம் இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் அவருக்கு மீண்டும் பிரச்சனை ஆகி இருக்கிறது பழைய விவகாரம் ஒன்று.
ஏற்கனவே சிம்பு நடித்த AAA படத்தினால் தான் அவரது பெயர் எக்கச்சக்கமாக டேமேஜ் ஆகி இருந்தது. அவரது திரையுலக வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய அடியை கொடுத்தது இந்த படம் தான் என்றும் சொல்லலாம்.
அதை எல்லாம் இப்போது அவர் தாண்டி வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார். ஆனாலும் ஏற்கனவே AAA திரைப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கிளப்பி இருந்த விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்த படத்தில் சிம்புவால் தனக்கு 20 கோடி நஷ்டம், 60 நாள் கால்ஷீட் கொடுட்துவிட்டு 27 நாள் மட்டுமே நடித்து கொடுத்தார்.
அதனால் தனக்கு இந்த படத்தில் ஏற்பட்டிற்கும் இழப்பிற்கு சிம்பு தான் இழப்பீடு தரவேண்டும் என மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டிருந்தார்.ஆனால் அவருக்கு சிம்பு தரப்பில் இருந்து எந்த விதமான நஷ்ட ஈடும் தரப்படவில்லை.
அதே சமயம் சிம்புவின் திரையுலக வாழ்க்கை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கும் இந்த வேளையில், எனக்கு நஷ்ட ஈடு தராமல் சிம்பு இனி எந்த படத்திலும் நடிக்க கூடாது என கூறி மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கைவைத்திருக்கிறார் மைக்கேல் ராஜ். இதனால் சுந்தர்.சி படத்தில் நடித்து வரும் சிம்புவிற்கு ஏதாவது தடைவிதிக்கப்படுமோ என கலங்கி இருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.