சிம்புவை கடுப்பாக்கிய மகத்; பிராச்சியுடன் சமாதனம் ஆகிவிட்டாராம்; அப்போ யாஷிகா வாழ்கை?

Published : Sep 01, 2018, 02:19 PM ISTUpdated : Sep 09, 2018, 07:41 PM IST
சிம்புவை கடுப்பாக்கிய மகத்; பிராச்சியுடன் சமாதனம் ஆகிவிட்டாராம்; அப்போ யாஷிகா வாழ்கை?

சுருக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத் கலந்து கொண்ட நாள் முதல் வெளியேறும் நாள் வரை அதிகம் உச்சரித்த பெயர் சிம்பு தான். சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் அவர் குறித்து எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டே தான் இருப்பார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத் கலந்து கொண்ட நாள் முதல் வெளியேறும் நாள் வரை அதிகம் உச்சரித்த பெயர் சிம்பு தான். சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் அவர் குறித்து எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டே தான் இருப்பார். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் மகத்துக்கும் இதனால் நல்ல பெயர் தான் இருந்தது. ஆனால் போகப்போக அவர் செய்த பல வேலைகள் அவருக்கே எதிராகிவிட்டது. அதிலும் சக போடியாளர்களிடம் அவர் அத்து மீறி நடந்து கொண்டவிதம் பார்வையாளர்கள் மத்தியில் அவருக்கு கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்தது.

பிக் பாஸ் வீட்டுக்குள் அவரை வாழ்த்தி அனுப்பிய அவரது காதலி பிராச்சிக்கே அவர் துரோகம் செய்வது போன்ற சில செயல்களிலும் அவர் ஈடுபட்டது அவருக்கு இருந்த கொஞ்சம் நல்ல பெயரையும் கெடுத்துவிட்டது. 

யாஷிகா உடனான காதல் , அந்த காதலில் மயங்கி மும்தாஜ் மீது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் தூண்டுதலால் கோபப்பட்டது என மகத் அடுத்தடுத்து எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவரை பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியே துறத்தி விட்டது.

பிக் பாஸ் வீட்டினுள் வெறித்தனமாக நடந்து கொண்ட மகத் வெளியே வந்த பிறகு ஆளே மாறிவிட்டார். மும்தாஜிடம் மன்னிப்பு வேறு கேட்டிருக்கிறார். அதன் பிறகு சமீபத்தில் தன்னுடைய காதலி பிராச்சியை சந்தித்த மகத் ஒருவழியாக அவரை சமாதானம் செய்திருக்கிறார். முன்னதாக பிராச்சிக்கு இன்ஸ்டாகிராமில் தூது விட்டிருந்த மகத் அதன் பிறகு நேரில் சென்று சமாதனம் செய்திருக்கிறார்.

இது குறித்து அவரது நண்பர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் நாங்க எப்போ பிரிஞ்சோம் ,இது ஒரு சின்ன பிரச்சனை நாங்க மனசுவிட்டு பேசினதும் அது சரியாகிடுச்சு என கூலாக பதில் கூறி இருக்கிறார். மொத்தத்தில் அவர் எப்போதும் போல கூலாக தான் இருக்கிறார். பிக் பாஸ் ரசிகர்கள் தான் கடுப்பாகி இருக்கின்றனர். இதில் கூடுதல் தகவல் என்ன என்றால் மகத்தின் இந்த நடவடிக்கைகளால் சிம்பு வேறு செம அப்செட் ஆகி இருக்கிறாராம். அது தான் மகத்துக்கும் வருத்தமாம்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு