நித்யானந்திற்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி... தம்பி ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் கோரிக்கை வைத்த கார்த்தி... எதற்காக தெரியுமா?

Published : Nov 30, 2019, 05:36 PM IST
நித்யானந்திற்கு  ஒரு நிமிடம் மெளன அஞ்சலி... தம்பி ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் கோரிக்கை வைத்த கார்த்தி... எதற்காக தெரியுமா?

சுருக்கம்

இந்த நிகழ்ச்சியில் பேச மேடையேறிய நடிகர் கார்த்தி, தலைவன்னா இப்படி தான் இருக்கனும் என அவரது ரசிகர்கள் புகழும் படி ஒரு காரியத்தை செய்து அனைவரையும் அசரடித்துள்ளார். 

கார்த்தி - ஜோதிகா அக்கா, தம்பியாக நடித்துள்ள "தம்பி" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  கார்த்தி, சூர்யா, ஜோதிகா, சத்யராஜ், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் பேச மேடையேறிய நடிகர் கார்த்தி, தலைவன்னா இப்படி தான் இருக்கனும் என அவரது ரசிகர்கள் புகழும் படி ஒரு காரியத்தை செய்து அனைவரையும் அசரடித்துள்ளார். 

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த நித்யானந்தன் என்பவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும் போது சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மரணமடைந்த நித்யானந்தன் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகர், மேலும்  கார்த்தியின் மக்கள் நல மன்ற நிர்வாகியாவார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட கார்த்தி, நித்யானந்தன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது சடலத்தை பார்த்த  கார்த்தி கதறி அழுதார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 


இந்நிலையில் தம்பி ஆடியோ விழாவில் பேசுவதற்கு முன்பு, இன்று காலை உயிரிழந்த தனது ரசிகர் நித்யானந்தனுக்கு  ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். மேலும் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டுமென தனது ரசிகர்களுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள் வைத்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அட்வான்ஸ் புக்கிங்கில் தெறிக்கவிடும் ஜனநாயகன்... அடேங்கப்பா இத்தனை கோடி வசூலா? லீக் ஆன படத்துக்கு இம்புட்டு டிமாண்டா?
Kaylee Hottle: 'காட்ஸில்லா' பட நடிகை கார் விபத்தில் மரணம்! 18 வயதில் பறிபோன உயிர்