
இயக்குனர் அட்லீ தற்போது, விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, 'பரியேறும் பெருமாள்' கதிர், இந்துஜா உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் பல துணை நடிகைகள் கலந்து கொண்டு நடித்து வரும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
அப்போது, துணைநடிகைகளை அட்லீ மற்றும் அவருடைய உதவி இயக்குனர் ஆகியோர் அவமரியாதையோடு நடத்தியதாக, துணைநடிகை கிருஷ்ணா தேவி, என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.