
சமீபத்தில் நடந்த, எழுத்தாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரபல நடிகரும், இயக்குனரும், எழுத்தாளருமான கே.பாக்யராஜ், முதலமைச்சரை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், கலைஞரின் எழுத்தால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது.
நான் தனிப்பட்ட முறையில் கலைஞரின் எழுத்தை அதிகம் ரசிப்பவன், என்னுடைய எழுத்தை அதிகம் மதிப்பவர் கலைஞர் உடனான நட்பு நீண்டகாலமாக தொடர்பில் இருந்தவர். அதே போல் கலைஞர் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரின் நிகழ்விலும் சமமாக பங்கேற்றவன் நான்.., தமிழ் திரையை பொறுத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் கலைஞர் தான் என பேசினார். மேலும் சங்க தேர்தலுக்கு உறுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. சமீபகாலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குனர்கள் படம் எடுக்கின்றனர், வெற்றி மாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுகின்றனர். தமிழ் திரை உலகில் எழுத்தாளர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மை தான். தமிழ் நடிகர்கள் படங்கள் ஆந்திராவிலும் இந்தியிலும் அதிகம் ஓடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. என தன்னுடைய பேட்டியில் கூறியுள்ள இவர், தமிழ் திரையுலகில் அதிகம் எழுத்தாளர்கள் வரவேண்டும் எங்கிற ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.