#Breaking மூலையில் ரத்த கசிவு... கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ!

Published : Mar 24, 2023, 03:05 PM ISTUpdated : Mar 24, 2023, 05:14 PM IST
#Breaking மூலையில் ரத்த கசிவு... கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ!

சுருக்கம்

கர்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கர்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவர் சென்றிருந்தார். இந்நிலையில் இவர் ஓட்டலில் தங்கி இருந்தபோது, திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கியுள்ளார். சுயநினைவை இழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டு, கோமா நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

அட்ராசக்க... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு வழக்கில் மூன்றாவது நபர் அதிரடி கைது!

மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அவருடைய உடல்நிலை சற்று ஆபத்தான நிலையில் உள்ளதாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கர்நாடக சங்கீத பாடகியான பாடகர் பாம்பே ஜெயஸ்ரிக்கு தற்போது 58 வயது ஆகிறது. இன்று லண்டனின் டங் ஆடிட்டோரியம், யோகோ ஓனோ லெனான் சென்டர், லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், இந்த எதிராராத நிகழ்வின் காரணமாக ICU-வில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாராயம் விற்ற காசில் அரசாங்கம் நடக்குது.. இனி கஞ்சா கடையும் திறப்பார்களோ? பொளந்துகட்டிய இயக்குனர் பேரரசு!

மேலும் கடந்த வாரம் இவருக்கு தி மியூசிக் அகாடமியின் சார்பில் 'சங்கீதா கலாநிதி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் பாடியுள்ளார். குறிப்பாக தமிழில், 'மின்னலே' படத்தில் வசீகரா, மஜ்னு படத்தில் முதல் கனவே, காக்க காக்க படத்தில் ஒன்றா ரெண்டா ஆசைகள், என சுமார் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.  மேலும் பக்தி பாடல்கள் ஏராளமாக பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!