
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின் சீரியல் நடிகையாக மாறியவர் வி.ஜே.சித்ரா. விரையில் இவரை திருமண கோலத்தில் பார்ப்போம் என நினைத்த ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயமாக அமைந்துள்ளது சித்ரா ஓட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டு உயிர் விட்டுள்ள சம்பவம்.
ஷூட்டிங் முடிந்த கையேடு வருங்கால கணவர் ஹேமத்துடன், ஓட்டல் அறைக்கு வந்துள்ளார். அங்கு இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சித்ரா கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்திலும் இருந்துள்ளார்.
உடை மாற்ற வேண்டும் என ஹேமத்தை வெளியே போக சொல்லிவிட்டு, தற்கொலை என்கிற முடிவை சித்ரா எடுத்துள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஹேமத் உள்ளே சென்று பார்த்த போது தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இவர்களுக்குள் என்ன பிரச்சனை, மன அழுத்தத்திற்கு சித்ரா ஏதேனும் சிகிச்சை எடுத்து வந்தாரா என்கிற பல்வேறு கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், சித்ராவிற்கும் - ஹேமத்திற்கும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் திருமணம் ஆகிவிட்டதாக திடுக் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆர்.டி.ஓ விசாரணை துவங்கப்பட்டுள்ளது. முகப்பேர், மேற்கு கோட்டாட்சியர் இது குறித்து விசாரணை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.