பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து... செம்ம கலாட்டா செய்த ஷெரின் அம்மா! சாண்டிக்கு மிரட்டல்... முகேனுக்கு எச்சரிக்கை பாஸ்!

Published : Sep 13, 2019, 06:01 PM IST
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து... செம்ம கலாட்டா செய்த ஷெரின் அம்மா! சாண்டிக்கு  மிரட்டல்... முகேனுக்கு எச்சரிக்கை பாஸ்!

சுருக்கம்

பிக்பாஸ் வீடிற்குள் நேற்றைய தினம், வனிதாவின் குழந்தைகள், சேரன் மகள், மற்றும் தர்ஷனின் பெற்றோர் ஆகியோர் வருகை தந்தனர். கிட்ட தட்ட 80 நாட்களுக்கு பிறகு குடும்பத்தினரை பார்க்கும் போட்டியாளர்கள் அணைத்து பிரச்சனைகளையும் மறந்து, மிகவும் சந்தோஷயமாக உள்ளனர்.  

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அனைவரும், தங்களால் முடிந்த வரை வெளியில் அவர்களை எப்படி பார்க்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சியில் எதிர்பார்க்க முடியாத சில மாற்றங்கள் இருக்கும் என்றே நம்புகிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், இன்றைய தினம், பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை சந்திக்க, கவினின் நண்பர், சாண்டி குடும்பத்தினர் மற்றும் ஷெரினின் பெற்றோர் ஆகியோர் உள்ளே வருகிறார்கள் என்பது ப்ரோமோ மூலமே தெரிகிறது.

உள்ளே வந்த ஷெரினின் அம்மா குட்டி குட்டி கலாட்டா செய்து, ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். குறிப்பாக, சாண்டியிடம் நீ ஷெரீனை ரொம்ப தொந்தரவு செய்யுற பார்த்துகிட்டு தான் இருக்கேன் என செல்ல மிரட்டலோடு கூறினார். ஷெரினின் சகோதரியுடன் முகேன் கை கோர்த்து நடனமாடிய போது, முகேன்... அபிராமி கோச்சிக்கும் டா என எச்சரிக்கை விடுத்தது, ஹவுஸ் மேட்சுக்கு மட்டும் அல்ல பார்ப்பவர்களுக்கும் செம்ம என்டர்டெயின்மெண்டாக அமைந்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 மினிட்ஸ் பிக்பாஸ் என்று கேட்ட மகள்கள்: சந்தோஷத்தில் திகைத்து நின்ற சாண்ட்ரா! அழ வைக்கிறீங்களேப்பா!
ஹாலிவுட் லெஜண்ட் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த தரமான சம்பவம்... 'தி ஒடிஸி' டிரெய்லர் இதோ