காஜல் அகர்வாலும் ‘அதை’ ஒட்டிவிடும் ஷங்கர்: இந்தியன் 2-வில் எசகுபிசகு திருப்பம்!

Vishnu Priya   | Asianet News
Published : Feb 03, 2020, 07:15 PM IST
காஜல் அகர்வாலும் ‘அதை’ ஒட்டிவிடும் ஷங்கர்: இந்தியன் 2-வில் எசகுபிசகு திருப்பம்!

சுருக்கம்

காஜல் அகர்வால், கமல்ஹாசனின் மாஸ்டர் பீஸான ‘இந்தியன் 2’வில் இருக்கிறார் அல்லவா! ஏதோ ஒரு உணர்ச்சி உந்துதலில் ‘இந்தப் படத்தில் 80 வயது பாட்டியாக வருகிறேன். கமலுக்கே கெத்து காட்டும் கேரக்டர்!’ என்று சஸ்பென்ஸை உடைத்துவிட்டார். இதனால் காஜல் மேல் செம்ம காண்டில் இருக்கிறார் ஷங்கர். 

*    சினிமாவிலிருந்து ரொம்பவே பல ஆண்டுகளாக விலகி இருந்தார் குஷ்பு. வில்லு படத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டிலும், அரண்மனை 2 படத்தில் கிளைமேக்ஸ் பாடலிலும் ஆடியிருந்தது மட்டுமே அவரது சமீப சினிமா பங்கேற்பு. இந்த நிலையில், லேட்டாய் வந்தாலும் செம்ம லேட்டஸ்டாய் மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்திருக்கும் குஷ்பு ரஜினியின் ஹீரோயினாகி இருக்கிறார். 
இதோடு மட்டுமில்லாமல் தன் கணவர் இயக்கும் ‘அரண்மனை 3’ படத்திலும் ஒரு வெயிட் ரோல் பண்றார். 
(குஷ்புனாலே வெயிட் தானே பா!)

*    தளபதி விஜய்யின் தென் சென்னை மாவட்ட ரசிகர்கள் அவரை ‘சி.எம்’ என்று சொல்லி போஸ்டர் ஒட்டினர். உடனே ஆளுங்கட்சியிலிருந்து முறைப்பு விசாரணை வந்திருக்கிறது. இதையடுத்து ‘C.M. னா Collection Master-ன்னு அர்த்தம்’ என்று பதில் சொல்லியுள்ளனர். ஆனாலும் விடவில்லையாம் ஆளும் தரப்பு, குடைச்சல் தொடர்கிறதாம். 
இதற்கிடையில் ‘அவங்களுக்கு நாம ஏன் பயப்படணும்? சி.எம்.னா....சீஃப் மினிஸ்டர்னு சொல்லுவோம்’ என்று ஒரு டீம் கெளம்பியிருக்கிறதாம். 
( பதவி முக்கியம் பிகிலேய்!....)

*    செம்ம ஜாலி பறவைதான் சமந்தா. அவரது ஃபேவரைட் ஸ்பாட்களில் முக்கியமானது கோவா. இதனால் அவரது வூட்டுக்காரர் நாக சைதன்யா, தன் மனைவிக்காக ஒரு பங்களாவே கட்டி வருகிறாராம் கோவாவில். 
(அவருக்கென்னபா? சமந்துக்காக கோவிலே கட்டுவார்)

*    காஜல் அகர்வால், கமல்ஹாசனின் மாஸ்டர் பீஸான ‘இந்தியன் 2’வில் இருக்கிறார் அல்லவா! ஏதோ ஒரு உணர்ச்சி உந்துதலில் ‘இந்தப் படத்தில் 80 வயது பாட்டியாக வருகிறேன். கமலுக்கே கெத்து காட்டும் கேரக்டர்!’ என்று சஸ்பென்ஸை உடைத்துவிட்டார். இதனால் காஜல் மேல் செம்ம காண்டில் இருக்கிறார் ஷங்கர். 
(விடுங்க ஜி, ஒரு மருவை ஒட்டிவிட்டு, கெட் - அப்பை மாத்திடுங்க)

*    இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகன் யுவன் படமாக்குகிறார். இதில் ராஜாவாக நடிக்க தனுஷை டிக் பண்ணியிருக்கிறார். தனுஷும் டபுள் ஓ.கே. சொல்லிவிட்டார். இப்போது இந்த ப்ராஜெக்ட் ஃபைல் இளையராஜாவிடம் போயிருக்கிறது. சாமியிடம் இருந்து இன்னும் ஒரு ரிப்ளையும் வரலை. 
(கங்கை அமரனா கருணாகரன் ஓ.கே.வா!)

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!