முதல் முறையாக அப்பாவின் படத்தை பார்த்த செல்வராகவன் மகன்! எப்படி வளர்ந்துட்டாரு!

By manimegalai a  |  First Published Jun 5, 2019, 5:08 PM IST

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக நடிகை அனுஷ்கா மற்றும் ஆர்யா நடித்த 'இரண்டாம் உலகம்' திரைப்படம் கடந்த  2013 ஆண்டு வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து, 6 வருடங்களாக எந்த படத்தையும் செல்வராகவன் இயக்கவில்லை.


இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக நடிகை அனுஷ்கா மற்றும் ஆர்யா நடித்த 'இரண்டாம் உலகம்' திரைப்படம் கடந்த  2013 ஆண்டு வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து, 6 வருடங்களாக எந்த படத்தையும் செல்வராகவன் இயக்கவில்லை.

இந்நிலையில் தற்போது, நீண்ட இடைவெளிக்கு பின் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

Tap to resize

Latest Videos

சூர்யா ரசிகர்கள் மத்தியில் என்ஜிகே படத்திற்கு முதல் நாளே மிக பெரிய எதிர்பார்ப்பு கிடைத்தாலும், அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு  தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது.

இந்நிலையில், செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி போட்டுள்ள ட்விட் ஒன்று அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது முதல் முறையாக செல்வராகவனின் மகன் அவர் அப்பா இயக்கியுள்ள படத்தை பார்த்துள்ளார் என கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தையும் கீதாஞ்சலி வெளியிட்டுள்ளார். இதில் குழந்தையாக இருந்த செல்வராகவனின் மகன் பெரியவனாக வளர்ந்துள்ளது தெரிகிறது.

Off to watch an appa padam for the first time! pic.twitter.com/npByZxzhFe

— Gitanjali Selvaraghavan (@GitanjaliSelva)

click me!