’ரஜினி படத்தை வென்றது தர்மசங்கடமான சந்தோஷம்தான்’ ...’விஸ்வாசம்’ தயாரிப்பாளர் ஆனந்தக்கண்ணீர்...

Published : Jan 13, 2019, 11:22 AM IST
’ரஜினி படத்தை வென்றது தர்மசங்கடமான சந்தோஷம்தான்’ ...’விஸ்வாசம்’ தயாரிப்பாளர் ஆனந்தக்கண்ணீர்...

சுருக்கம்

தியாகராஜனின் மாமனார் ஆர்.எம்.வி.யின் தயாரிப்பில் தொடர்ச்சியாக ‘ராணுவ வீரன்’,’மூன்று முகம்’, ‘தங்க மகன்’,’ஊர்க்காவலன்’,’பணக்காரன்’,’பாட்சா’ என்று சூப்பர் ஹிட் படங்களில் நடித்துக்கொடுத்தவர் ரஜினி. 

ரஜினியின் ‘பேட்ட’ படத்தை தங்களது ‘விஸ்வாசம்’ படம் வென்றது தனக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சி அளிக்கவில்லை,. மாறாக பெரும் தர்மசங்கடத்தையே ஏற்படுத்தி உள்ளதாக சத்யஜோதி தியாகராஜன் தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறிவருகிறாராம்.

தியாகராஜனின் மாமனார் ஆர்.எம்.வி.யின் தயாரிப்பில் தொடர்ச்சியாக ‘ராணுவ வீரன்’,’மூன்று முகம்’, ‘தங்க மகன்’,’ஊர்க்காவலன்’,’பணக்காரன்’,’பாட்சா’ என்று சூப்பர் ஹிட் படங்களில் நடித்துக்கொடுத்தவர் ரஜினி. சத்யஜோதி பிலிம்ஸ் தமிழ்த்திரையுலகில் தலைநிமிர்ந்து நிற்க முக்கிய காரணமாகவும் இருந்தவர் ரஜினிதான்.

சத்யஜோதி தியாகராஜனின் தர்மசங்கடத்துக்கு இதுதான் காரணம். ‘உண்மையில் ரஜினி படத்துடன் மோதும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. தீபாவளிக்கே வெளியாகியிருக்கவேண்டிய ‘விஸ்வாசம்’ சினிமா ஸ்ட்ரைக்கால்தான் தள்ளிப்போனது. ஆனால் அப்போதே, அதாவது கடந்த ஆகஸ்ட் மாதமே நாங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்துவிட்டோம். ‘பேட்ட’ அறிவிப்புதான் திடீரென்று வந்தது.

இந்த போட்டியைத் தவிர்க்க நடந்த எந்த முயற்சிகளுமே எடுபடவில்லை. பொங்கலுக்குப் பிறகு விஸ்வாசத்தைத் தள்ளிப்போட சரியான தேதிகளும் இல்லை. எனவேதான் வேறுவழியின்றி ரஜினியோடு மோதும்படி ஆனது என்று வெற்றியைக் கொண்டாடமுடியாத வேதனையோடு கூறுகிறாராம் ரஜினி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?